பாபர் மசூதி இடிப்பு வன்முறை.. 31 ஆண்டுக்கு பின் கர்நாடகாவில் கைதான நபருக்கு ஜாமீன்.. கோர்ட் உத்தரவு
பெங்களூர்: பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த வன்முறையில் கடைகளுக்கு தீவைத்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் ஸ்ரீகாந்த் பூஜாரி என்பர் தற்போது கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து பாஜக பெரிய அளவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி கும்பாபிேஷகம் நடத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமானவர்கள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் இருந்து சாமியார்கள், மடாதிபதிகள் விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் அயோத்தி நகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையே தான் கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து பெரிய அளவில் வன்முறைகள் வெடித்தன. அப்போது தார்வார் மாவட்டம் உப்பள்ளி சென்னபேட்டையை சேர்ந்த இந்து அமைப்பை ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் வன்முறையில் ஈடுபட்டு சில கடைகளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகா முழுவதும் பாஜக சார்பில் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் கைது செய்யய்பட்ட ஸ்ரீகாந்த் பூஜாரி சார்பில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து நாளை ஸ்ரீகாந்த் பூஜாரி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் சஞ்சீவ் படாசகா கூறுகையில், ‛‛நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். நீதிமன்றம் உத்தரவின் நகல் இன்னும் வரவில்லை. நாளை ஸ்ரீகாந்த் பூஜாரி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications