லப்டப்.. லப்டப்.. பெங்களூர் மெட்ரோ ரயிலில் உயிருடன் துடித்த இதயம்.. டாக்டர்கள் செய்த தரமான சம்பவம்
பெங்களூர்: பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு இதயம் எடுத்து செல்லப்பட்டு உரியவருக்கு சரியான நேரத்தில் பொருத்தப்பட்டது. இதுதொடர்பான போட்டோக்கள் வெளியான நிலையில் டாக்டர்கள் குழு, பெங்களூர் மெட்ரோ நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பெங்களூரை எடுத்து கொண்டால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக தான் இருக்கும். குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்களில் பயணிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் பெங்களூரில் சாலை மார்க்கமாக உடல் உறுப்புகளை எடுத்து சென்று ஒருவருக்கு பொருத்துவது பெரிய சவாலாக இருக்கும்.

இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலை அறிந்த மருத்துவர்கள் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் இதயத்தை எடுத்து சென்று வெற்றிகரமாக பொருத்தி உள்ளனர்.
இதயம் தானம்
பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் ஸ்பார்ஷ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரை இனி பிழைக்க வைக்க முடியாத நிலை வந்தது. இதையடுத்து அவரது இதயத்தை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
மெட்ரோ ரயிலில் இதயம்
இதையடுத் அந்த நபரிடம் இருந்து இதயம் தானமாக பெறப்பட்டது. அந்த இயத்தை பெங்களூர் தெற்கு பரேட் மைதானத்தின் மெட்ரோ நிலையத்தின் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதயத்தை சாலை மார்க்கமாக எடுத்து சென்றால் அதிக நேரம் எடுக்கும். இதனால் இதயத்தை சரியான நேரத்தில் பொருத்த முடியாமல் போகலாம். இதனால் டாக்டர்கள் மெட்ரோ ரயிலில் இதயத்தை எடுத்து செல்ல முடிவு செய்தனர்.
20 நிமிட பயணம்
அதன்படி நேற்று முன்தினம் இரவில் 7 டாக்டர்கள் கொண்ட குழுவினர் யஷ்வந்தபுரத்தில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து இதயத்தை தானமாக பெற்று மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இரவு 11.01 மணிக்கு அவர்கள் மெட்ரோ ரயிலில் ஏறினர்.
20 நிமிடத்தில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களை கடந்து அந்த இதயம் இரவு 11.21 மணிக்கு பரேட் கிரவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றது. அங்கிருந்து உடனடியாக இதயம் அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு வெற்றிகரமாக இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது.
ஆபரேஷன் சக்சஸ்
மெட்ரோ ரயிலுக்கு பதில் டாக்டர்கள் காரில் இதயத்தை எடுத்து சென்றிருந்தால் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை ஆகி இருக்கும். மெட்ரோ ரயிலை டாக்டர்கள் தேர்வு செய்ததால் இதயம் உரிய நேரத்தில் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது. பெங்களூரை எடுத்து கொண்டால் மெட்ரோ ரயில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
2வது முறை
இதற்கு முன்பு அதாவது கடந்த மாதம் ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி மெட்ரோ ரயில் நிலையம் வரை மனிதனின் கல்லீரல் எடுத்து சென்று இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது இதயம் மெட்ரோ ரயிலில் எடுத்து சென்று இன்னொருவருக்க வாழ்க்கையை அளித்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications