Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.100 கோடி சொத்து சேர்த்தேன்.. ஒரெயொரு மகனும் ஆர்சிபி கூட்ட நெரிசலில் இறந்துட்டான்.. கதறி அழுத தந்தை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛என் ஒரேயொரு மகனுக்காக ரூ.100 கோடி சொத்து சேர்த்தேன். இரவு, பகல் பார்க்காமல் பணம் சேர்த்தேன். ஆனால் அவன் பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டான்'' என்று கல்லூரி மாணவன் பூமிக்கின் தந்தை கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

ஐபிஎல்லில் கடந்த 17 சீசன்களால் தோல்வியை தழுவி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக சாம்பியன் ஆகி உள்ளது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 18 வது சீசனின் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

i-accumulated-rs-100-crore-asset-for-my-only-one-son-but-he-died-in-bangalore-stampede-says-bhoom

இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடகா மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து பைனல் முடிந்த மறுநாள் ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்தனர். கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார்.

அதன்பிறகு விதான சவுதா, பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் விதானசவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பல லட்சம் பேர் குவிந்தனர். அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் பூமிக் என்ற சிறுவன் இறந்தார். இன்ஜினியரிங் மாணவரான பூமிக்கிற்கு 21 வயது ஆகிறது. தீவிர ஆர்சிபி ரசிகர். நேற்றைய தினம் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வந்தபோது அவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார்.
இந்நிலையில் தான் பூமிக்கின் தந்தை கதறி அழுத வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பூமிக்கின் உடலை பார்த்து அவரது தந்தை கதறி அழுதபோது, ‛‛என் மகன் ரோட்டில் இறந்து விட்டான். அவனை விட்டு நான் ஒரு மணிநேரம் கூட பிரிந்து இருந்தது இல்லை. இன்ஜினியரிங் படித்தான். ஆம்புலன்ஸ் இல்லை என்று ஜீப்பில் ஏற்றி சென்றுள்ளனர். அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன். இந்த உலகில் யாருக்கும் இத்தகைய நிலை வர கூடாது. என் மகனின் உடலை வெட்டாதீங்க. எனக்கு ஒரேயொரு மகன் தான். அவனது உடலை வெட்டாமல் என்னிடம் ஒப்படையுங்க. ஒரேயொரு மகனையும் நான் இப்போது இழந்து நிற்கிறேன்.

என்னிடம் சொல்லாமலே அவன் இங்கே (ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்) வந்துவிட்டான். என் மகனுக்காக இரவு, பகல் பாராமல் பணம் சம்பாதித்தேன். கோடி கோடியாய் பணம் சம்பாதித்தேன். பல பேருக்கு அன்னதானம் செய்தேன். நூறு கோடிக்கு சொத்து சேர்த்தேன். ஆனால் அவன் இப்போது இறந்துவிட்டான். அவன் என்னை விட்டு சென்றுவிட்டன். அவனுக்கு இங்கேயே சொர்க்கத்தை நான் கொடுத்தேன். அவனுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுத்தேன். இப்போது அவன் என்னை தனியாக விட்டு விட்டு சென்றுவிட்டான்'' என்று கதறி அழுதார். இது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+