ஓடும் பைக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கைதான ரேபிடோ கேப்டன் சொன்ன காரணம்.. அதிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் 20 வயது இளம்பெண்ணை பைக்கில் அழைத்து செல்லும்போது ரேபிடோ பைக் கேப்டன் (ஓட்டுநர்) அவரது காலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை அந்த இளம்பெண் வீடியோவாக எடுத்து வெளியிட்ட நிலையில் போலீசார் ரேபிடோ பைக் கேப்டனை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர், ‛‛சார் நான் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனக்கு உடலில் அரிப்பு பிரச்சனை உள்ளது. அந்த இடத்தை தான் கைகளால் தொட்டேன்'' என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பெங்களூருவுக்கு புதியவர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் வெளியூரை சேர்ந்த 20 வயது பெண் பெங்களூர் வந்தார். அவர் Cabin Crew பணிக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த இளம்பெண் பெங்களூர் சுதாமநகரில் உள்ள பிஜியில் தங்கி உள்ளார். இந்நிலையில் தான் கடந்த 6ம் தேதி இளம்பெண் ‛ரேபிடோ' பைக்கில் பயணித்தார். அப்போது பைக் கேப்டன் (ஓட்டுநர்) இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அவரது காலை பலமுறை தொட்டுள்ளார்.
இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. வாகனத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது. ரேபிடோ கேப்டனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ரேபிடோ கேப்டனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவரது பெயர் லோகேஷ் (வயது 28). பெங்களூர் உல்லால் பகுதியில் உள்ள முனியப்பா லே-அவுட்டில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் கேட்டபோது, ‛தனது உடலில் பின்பக்கத்தில் அரிப்பு உள்ளது. உடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பின்பகுதியில் அரிப்பு எடுத்த இடத்தை தான் தொட்டேன். பாலியல் தொல்லை கொடுக்கவில்லை'' என்று கூறினார். ஆனால் போலீசார் நம்பவில்லை.
இதுபற்றி பெங்களூர் மத்திய மண்டல துணை கமிஷனர் அக்சய்எம் ஹாஹே கூறுகையில், ‛‛பெண் பதிவிட்ட வீடியோ அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தோம். எங்களின் சோசியல் மீடியா டீம் பாதிக்கப்பட்ட பெண்ணை தொர்டு கொண்டு பேசினயது. அவர் போீஸ் நிலையம் வந்து புகாரளித்தார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 75ன் (பாலியல் தொல்லை) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications