ஜெயில்ல கூட போடுங்க.. மனைவியிடம் அனுப்பிடாதீங்க! தனிப்படை போலீசுக்கு ஷாக் தந்த பெங்களூர் என்ஜினியர்
பெங்களூர்: கணவரை காணவில்லை, யாரோ கடத்திவிட்டதாக பெண் ஒருவர் புகார் குறித்து விசாரணை நடத்தியதில், மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் தான் கணவர் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவரை மனைவியிடம் செல்லுமாறு போலீசார் கூறியபோது, "ஐயா என்னை ஜெயிலில் கூட போடுங்கள், ஆனால் மனைவியிடம் மட்டும் அனுப்பி வைத்துவிடாதீங்க" என கெஞ்சிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விபின் குப்தா (வயது 34). இவர் தன்னை விட 8 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விபின் குப்தா பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் விபின் குப்தா குடும்பத்துடன் பெங்களூர் கோடிஹேஹள்ளி பகுதியில் வசித்து வந்துள்ளார். எனினும் விபின் குப்தாதுக்கும் மனைவிக்கும் திருமணம் ஆனதில் இருந்தே சண்டை இருந்து வந்துள்ளது. அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் விபின் குப்தா மன விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 4 ஆம் தேதி விபின் குப்தாவை காணவில்லை.
காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. 2 நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். ஆனால் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. அந்த சமயத்தில் தான் அவரது வங்கி கணக்கில் இருந்து 1.82 லட்சம் பணம் எடுக்கப்பட்டது மனைவிக்கு தெரியவந்தது.
இதனால் யாரோ நம் கணவரை கடத்திவிட்டதாக நினைத்து, இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளம் மூலமாக போலீசுக்கு புகார் செய்துள்ளார். அதில், தனது கணவரை 2 நாட்களாக காணவில்லை என்றும், அவரை யாரோ கடத்தி சென்று பணத்தை பறித்துள்ளதாக புகார் செய்திருந்தார். இதையடுத்து பெங்களூர் போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் 3 தனிப்படை அமைத்து விபின் குப்தாவை தேடி வந்துள்ளனர்.
பெங்களூர் ரயில் நிலையத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து அவர் உத்தர பிரதேசம் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உத்தரபிரதேசம் சென்று விபின் பாகத்தை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், "என்னுடன் 8 வயது மூத்த பெண்ணை நான் திருமணம் செய்தேன். ஆனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை தான் ஏற்பட்டு வந்தது. என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார். இதனால் தான் எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்காது.
தொடர்ந்து எனக்கு மன தொந்தரவு கொடுத்தார். இதனால் தான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்" என்றார். தொடர்ந்து போலீசார், சரி வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறினர். அப்போது சாப்ட்வேர் என்ஜினியர் விபின் குப்தா, என்னை வீட்டுக்கு மட்டும் அனுப்பிடாதீங்க... இங்கே ஜெயிலில் கூட அடைத்து வைங்க.. நான் இருக்கிறேன். ஆனால் என் மனைவியிடம் மட்டும் அனுப்பிவிடாதீங்க. மனைவியுடன் இனி வாழமாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications