ரூ.1,000 தரேன்.. ஹலோ இந்த காபியில் எச்சில் துப்ப முடியுமா? இளம்பெண்ணிடம் கெஞ்சிய இளைஞர்.. பின்னணி
பெங்களூர்: .உலகில் தினமும் பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பெங்களூரில் முகம் சுழிக்க வைக்கும் சம்பவம் ஒன்று பெங்களூரில் நடந்துள்ளது. ஐடி ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் தனது காபியில் துப்ப முடியுமா? காபியில் துப்பினால் ரூ.1,000 தருகிறேன்'' என்று கூறிய சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
தற்போது இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைதள பக்கங்களில் ஒன்று ரெடிட். இந்த சமூக வலைதளத்தில் ஒவ்வொருவரும் தங்களின் பணி, அலுவலகத்தில் ஏற்படும் சிரமங்கள், தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், சுவாரசிய சம்பவங்கள் குறித்து பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ‛ரெடிட்' வலைதளத்தில் பகிர்ந்த தகவல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இளம்பெண்ணிடம் ஒருவர் தனது ஸ்டார்பக்ஸ் காபியில் எச்சில் உமிழும்படி கூறியதோடு, அதற்காக ரூ.1000 தருவதாக கூறியுள்ளார். இந்த வினோதமான சம்பவம் குறித்து அந்த இளம்பெண் கூறியுள்ளதாவது:
நான் ‛ஸ்கிட்' மற்றும் ‛ஸ்லிவ்ட் டாப்' அணிந்து நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர் என்னை பார்த்தார். அவர் நட்பாக பழகுவது போல் பேச்சு கொடுக்க தொடங்கினார். அந்த நபர் பார்க்க ‛கோரமங்களாவின் ஐடி ஊழியர் போலவும், சாப்ட்பாய் - வைப் கொண்டவர். முதலில் கண்ணியத்துடனும், நட்பாகவும் இருந்தார். எங்களின் உரையாடல் பெங்களூரில் உள்ள கஃபேக்கள் பற்றியதாக மாறியது. அப்போது அவர் எனக்கு ஒரு காபி வாங்கி தர முன்வந்தார்.
நானும் ஒப்புக்கொண்டேன். இந்த வேளையில் கொஞ்சம் முட்டாள் தனமாக நடந்து கொண்டேன். மேலும் அவர் வாங்கி தந்த காபியை எடுத்து கொண்டேன். அப்போது அவர் என்னிடம், ‛‛நான் ஒன்று கேட்பேன். அது சற்று விசித்திரமாக இருக்கும் என்றார். மேலும் அவர் இந்த உதவியை செய்ய முடியுமா? என்று கேட்டதோடு, ‛ஸ்டார்பக்ஸ்' கோப்பையை திறந்து அதில் எச்சில் துப்பும்படி கூறினார்.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெயிட்.. வெயிட்.. நான் எதற்காக உங்களின் காபியில் எச்சில் துப்ப வேண்டும் என்று கேட்டு விலகி செல்ல முயன்றேன். அருகே உள்ள மெட்ரோ நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அதற்குள் அந்த நபர் என்னிடம் ஈஸியாக கிடைக்கும் ரூ.1,000யை தவறவிட்டதாக கூறினார்'' என்று பதிவிட்டுள்ளார்.
இளம்பெண்ணின் இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது. இந்த பதிவை பார்க்கும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருதரப்பினர் இளம்பெண் எழுந்து சென்றதை பாராட்டினார். அதில் ஒருவர், ‛‛உங்களின் சுயமரியாதைக்கான விலை வெறும் ரூ.1000 தானா? நீங்கள் அவரது வாய்ப்பை ஏற்காதது நல்லது'' என்று பாராட்டினார். மேலும் சிலர் அந்த நபரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதுதொடர்பாக ஒருவர், ‛‛இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இப்படியும் மனிதர் இருக்கிறாரா? நாம் வாழ்வது விசித்திரமான உலகம்'' என்று தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் யார் என்று தெரியாத நபரிடம் பேசி காபி குடிக்க சென்றது தவறு என்று கண்டித்தனர்.
இருப்பினும் அந்த இளைஞர் எதற்காக இளம்பெண்ணை தனது காபியில் எச்சில் உமிழும்படி கூறினார் என்பது தெரியவில்லை. இது Prank-கா இல்லை அந்த இளைஞர் வேறு உள்நோக்கத்துடன் அப்படி செய்ய சொன்னாரா? என்பது பற்றி இளம்பெண் தனது பதிவில் எதுவும் தெரிவிக்கவில்லை.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications