மாறும் களம்? டிகே சிவக்குமார் முதல்வரானால் ஜேடிஎஸ் ஆதரவாமே! குமாரசாமி கூறிய வார்த்தை.. அப்போ பாஜக?
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தனா் கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றால் ஜேடிஎஸ் கட்சியின் 19 எம்எல்ஏக்களும் அவருக்கு ஆதரவளிப்போம் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்து பரபரப்பை கிளப்பிய நிலையில் அதன் பின்னணி குறித்த விபரம் வளெியாகி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளனர்.

இந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. அந்த கட்சி வெறும் 76 இடங்களில் மட்டுமே வென்றது. அதோடு முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதற்கிடையே தான் துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இத்தகைய சூழலில் விரைவில் ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான குமாரசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியினர் தினமும் எங்கள் எம்எல்ஏக்களுக்கு கோரிக்கை வைதக வைக்கின்றனர். ஜிடி தேவேகவுடா எங்களுடன் வந்து விடுங்கள். உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களின் மகனுக்கு நல்ல பதவி வழங்கிறோம். அக்கா நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்து விடுங்கள். உங்களுக்கும் நல்ல பதவி தருகிறோம் என கூறுகிறார்கள்.
நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளை காலையில் அவர் (டிகே சிவக்குமார்) முதல்வராக பொறுப்பு ஏற்றால் எனது கட்சியின் 19 எம்எல்ஏக்களும் அவருக்கே ஆதரவு அளித்து விட்டு போகிறோம். இதனை விட்டுவிட்டு 10 பேர் வருகிறார்கள். 5 பேர் வருகிறார்கள். பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தயாராக இருக்கின்றனர் என சொல்லி கொண்டே இருக்க வேண்டாம்.
மேலும் பத்திரிகைகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இருந்தும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்தும் எங்கள் கட்சிக்கு எம்எல்ஏக்கள் வருவதாக தினமும் பத்திரிகையாளர்கள் முன்பு கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் தற்போது 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிக்கே வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இந்த எம்எல்ஏக்களின் தொகுதிக்கு எப்படி பணம் கொடுப்பார்கள்'' என சாடினார்.
அதாவது ஜேடிஎஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு செல்வதாக தொடர்ந்து டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கூறி வரும் நிலையில் கடுப்பான குமாரசாமி இப்படி தெரிவித்துள்ளார். மாறாக மனதார காங்கிரஸ் கட்சிக்கு தான் உள்பட 19 எம்எல்ஏக்களும் ஆதரவு அளிப்போம் என தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications