கமலுக்கு கெடு! நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் Thug Life வெளியாகாது: கர்நாடகா திரைப்பட சம்மேளனம்
பெங்களூர்: கன்னட மொழியின் தாய் தமிழ் என்று பேசிய நடிகர் கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் த ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகாது'' என்று கர்நாடகா திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு வார்னிங் செய்துள்ளார்.
‛நாயகன்' திரைப்படத்துக்கு பின் இயக்குநர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், நடிகர் சிலம்பரசன், திரிஷா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'.

இந்த திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது திரைப்படத்தை புரோமோஷன் செய்யும் பணிகளில் கமல்ஹாசன் உள்பட திரைப்பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது, சிறப்பு விருந்தினராக சிவராஜ் குமார் பங்கேற்றார். அதில் கமல்ஹாசன் பேசுகையில், ‛‛ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்'' என்றார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடகாவில் செயல்பட்டு வரும் கன்னட அமைப்பினர் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். முதல்வர் சித்தராமையா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இதனால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்புக்கு இடையே தான் கர்நாடகா திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு அதுபற்றிய முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார். இதுபற்றி நரசிம்மலு இன்று கூறியதாவது:தமிழை கன்னட மொழியின் தாய் என கூறுவதை ஏற்க முடியாது. கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்கமாட்டோம். கமல் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.கமல் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' படம் வெளியாகாது'' என்று வார்னிங் செய்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications