கர்நாடகா தேர்தல் முடிவுகள் அடிப்படையில் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு செம்ம அடி வெயிட்டிங்காம்!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் கர்நாடகாவின் 28 லோக்சபா தொகுதிகளில் எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்கிற கணக்குகளும் தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135; பாஜக 66; மஜத 19 இடங்களில் வென்றுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலம் கர்நாடகா. இந்த பெருமையை இப்போது பாஜக இழந்துள்ளது. லோக்சபா தேர்தல்களிலும் பாஜகவுக்கு தென்னிந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் சொற்ப இடங்கள்தான் கிடைத்து வரும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் மாநில கட்சிகள்தான் லோக்சபா தேர்தலில் கோலோச்சும். கேரளாவில் காங்கிரஸ் கை ஓங்கும், இடதுசாரிகளுக்கு சில தொகுதிகள் கிடைக்கும். ஆனால் கர்நாட்காவில் மட்டும்தான் பாஜகவுக்கு கொத்தாக லோக்சபா தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்கும்.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. தற்போது சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளை அடிப்படையாக வைத்து பல்வேறு கணக்குகள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் இதே டிரண்ட் நீடித்தால் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது?
கர்நாடகா தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால் தற்போது காங்கிரஸுக்கு மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 20 இடங்கள் கிடைக்குமாம்; பாஜகவுக்கு 4; மஜதவுக்கு 1 இடம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாம். எஞ்சிய 3 தொகுதிகள் எந்த கட்சிக்கு என உறுதியாக சொல்ல முடியாதாம்.
பொதுவாக சட்டசபை தேர்தல் கள நிலவரமும் லோக்சபா தேர்தல் கள நிலவரமும் ஒன்றாக இருப்பது இல்லை. இரு தேர்தல்களின் அடிப்படை பிரச்சனைகளும் வேறானவை. கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸும் ஜேடிஎஸ்-ம் கூட்டணி அமைத்தன. ஆனால் காலந்தோறும் இரு கட்சிகளும் பரம எதிரிகளாகவே இருந்துவிட்டதால் இந்த கூட்டணிக்கு வாக்குகள் பரஸ்பரம் பரிமாறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications