பவன் கல்யாணால்.. நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்.. பெங்களூரில் போஸ்டரை கவனிச்சீங்களா
பெங்களூர்: கன்னடர் அமைப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து பெங்களூரில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ள ‛தலைவன் தலைவி' மற்றும் நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள ‛ஹரி ஹரா வீர மல்லு' திரைப்படத்தின் போஸ்டர்களிலும் கன்னடத்தில் பெயர் எழுதி ஒட்டி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிற மொழியினர், தங்கள் மொழி படத்தின் பெயரை கூட படிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
நடிகராக இருந்த பவன் கல்யாண் தற்போது ஆந்திர துணை முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் பவன் கல்யாண் ‛ஹரி ஹர வீர மல்லு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. பெங்களூரில் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் பேனரில் கன்னட மொழி இடம்பெறவில்லை.
இதையடுத்து கன்னட அமைப்பினர் படத்தின் போஸ்டரை கிழித்து எறிந்தனர். பவன் கல்யாண் ரசிகர்கள் பிரமாண்ட பேனர் வைத்து இருந்ததாகவும், அதில்தான் கன்னட மொழி இல்லை என்று கூறி கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். மேலும் போஸ்டர், பேனரில் கன்னட மொழியை இடம்பெற செய்ய வேண்டும் என்று கூறினர்.
கன்னட அமைப்பினரின் இந்த வார்னிங்கால் தற்போது ‛ஹரி ஹரா வீர மல்லு' திரைப்பட போஸ்டரில் தெலுங்கு மொழியில் இருந்த பெயருக்கு மேல் கன்னட மொழியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ‛ஹரி ஹரா வீர மல்லு' என கன்னட மொழியில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது.
கன்னட அமைப்பினர் கலாட்டாவை தொடர்ந்து இப்போது பெங்களூரில் எல்லா படங்களின் போஸ்டர்கள் பெயர் மீதும், கன்னடத்தில் பெயர் எழுதி ஒட்டிவைத்துள்ளனர் தியேட்டர் நிர்வாகத்தினர்.https://t.co/YTXwj1G3Ws
— Nantha Kumar (@Nanthakumarrnk) July 26, 2025
அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ள ‛தலைவன் தலைவி' திரைப்படமும் பெங்களூரில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ஓடிவருகிறது. இந்த படத்தின் போஸ்டரும் தமிழில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் ஆக்ரோஷமான கன்னட அமைப்பினர், தலைவன் தலைவி என தமிழில் எழுதப்பட்டு இருந்த போஸ்டரில் கன்னட மொழியில் தலைவன் தலைவி என எழுதி ஒட்டி உள்ளனர்.
பெங்களூரை எடுத்து கொண்டால் கன்னட மொழி தெரியாமல் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து சென்ற அனைவருக்கும் கன்னட மொழியை வாசிக்க தெரியுமா? என்றால் கேள்விக்குறி தான். இப்படியான சூழலில் தான் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் பெயர்களின் மேல் கன்னட மொழியில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்து பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications