புர்கா அணிந்து பெண்ணாக வலம் வந்த வாலிபர்.. பிடித்து விசாரித்தபோது ஷாக்! அதிர்ந்த கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் இந்து வாலிபர் ஒருவர் புர்கா அணிந்து முஸ்லிம் பெண்ணாக வலம் வந்தார். அவரை பிடித்து விசாரித்த நிலையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்துக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. காங்கிரஸ் சார்பில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை கர்நாடகா அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டங்களில் விவாதித்து ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற அம்மாநில அரசு முயன்று வருகிறது. இதில் ஒன்றான சக்தி திட்டத்தின் கீழ் கர்நாடகா அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கடந்த மாதம் 11ம் தேதி முதல் செயல்பாட்டு வந்தது. இந்த திட்டத்தை தொடர்ந்து பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி உள்ளிட்ட சாதாரண அரசு பஸ்களில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தான் தார்வார் மாவட்டத்தில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பஸ்சில் இலவச பயணம் செய்யும் வகையில் இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் புர்கா அணிந்து முஸ்லிம்மாக மாறி பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:
தார்வார் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையத்தில் புர்கா அணிந்தபடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஆண் குரலில் பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் அவரது புர்காவை கழற்றக்கூறி விசாரித்தனர். அப்போது தான் அவரது பெயர் வீரபத்ரய்யா மதாபட்டி என்பதும், கர்நாடகா அரசு கொண்டு வந்துள்ள சக்தி யோஜனா திட்டத்தில் அரசு பஸ்களில் இலவச பஸ் பயணம் செய்யும் வகையில் புர்கா அணிந்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications