பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பெங்களூரில் விசிலடிக்க போகும் பிரகாஷ் ராஜ்.. தேர்தல் சின்னம் இதுதான் மக்களே!

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் களம் நாடு முழுக்க சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்க இருக்கிறது.

இதில் கர்நாடகா மிக முக்கியமான மாநிலமாக மாறி இருக்கிறது. பாஜக தென்னிந்தியாவில் அதிகம் நம்பி இருக்கும் மாநிலம் கர்நாடகா என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்குதான் சுயேட்சையாக பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார்.

மாபெரும் பேரணி.. மோடியின் கோட்டையில் மாஸ் பிரச்சாரம்.. வாரணாசியில் கலக்கும் பிரியங்கா! மாபெரும் பேரணி.. மோடியின் கோட்டையில் மாஸ் பிரச்சாரம்.. வாரணாசியில் கலக்கும் பிரியங்கா!

எப்போது தேர்தல்

எப்போது தேர்தல்

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளது. அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 18 தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

மாஸ் அறிவிப்பு

மாஸ் அறிவிப்பு

பிரகாஷ்ராஜ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன். மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்று குறிப்பிட்டு சென்று வருடமே இருந்தார். இந்த நிலையில் அவர் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

இதையடுத்து கடந்த வாரம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். . சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது இவருடன் உடன் வந்தனர். அதேபோல் இவரது ரசிகர்கள் பலரும் வேட்புமனு தாக்கலின் போது இவருடன் வந்தனர்.

என்ன சின்னம்

என்ன சின்னம்

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பெங்களூரு மக்களவை தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வேன். இந்த சின்னம் தனக்கு கிடைத்து இருப்பது பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Independent candidate Actor Prakash Raj gets Whistle symbol for Central Bangalore Seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X