பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மநீமதான் ஒரே வழி.. கமல்ஹாசனின் வழியை பின்பற்றும் பிரகாஷ் ராஜ்.. அசத்தல் யோசனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Prakash Raj follows kamal | ம.நீ.ம தான் ஒரே வழி!.. பிரகாஷ் ராஜ் அசத்தல் யோசனை!- வீடியோ

    பெங்களூர்: நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தல் தோல்வியை தொடர்ந்து புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருக்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாணியில் செயல்பட இவர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

    பிரபல கர்நாடக எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் 2.5 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இவரின் கொலையை தொடர்ந்து கொதித்தெழுந்த பிரகாஷ் ராஜ் அரசியலில் குதித்தார்.

    பாஜகவிற்கு எதிராக கடுமையாக பேசி வந்த பிரகாஷ் ராஜ் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்தார். அதேபோல் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.

    தோத்துட்டீங்க... பரவாயில்ல..!! பயம் மட்டும் இருக்கக் கூடாது.. இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்

    எங்கு போட்டி

    எங்கு போட்டி

    கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவருக்கு ஆதரவு அளித்தனர். நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்திப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி

    தோல்வி அடைந்தார்

    தோல்வி அடைந்தார்

    ஆனால் இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜ் மோசமாக தோல்வி அடைந்தார்.மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் பிரகாஷ் ராஜ் மூன்றாவது இடம்தான் பிடித்தார். முதல் இடத்தில் பாஜகவின் பிசி மோகன் 6 லட்சம் வகுக்கள் பெற்றார். மூன்றாம் இடம் பெற்ற வெறும் 28,000 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கட்சி தொடங்க முடிவு

    கட்சி தொடங்க முடிவு

    பிரகாஷ்ராஜ் தேர்தல் தோல்வியை தொடர்ந்து புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருக்கிறார். விரைவில் கட்சியை தொடங்கி அதை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அவர், நான் அரசியலில் இனிதான் தீவிரமாக களமிறங்க போகிறேன். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். இன்னும் சில நாட்களில் கட்சி தொடங்க போகிறேன்.

    போட்டி

    போட்டி

    இன்னும் சில மாதங்களில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இதில் நான் கட்சி தொடங்கி போட்டியிடுவேன். அடிமட்டத்தில் இருந்து கட்சியை வளர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். மக்களுக்காக தொடர்ந்து களத்தில் பணியாற்ற போகிறேன், என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டு இருக்கிறார்.

    திட்டங்களை விவரித்தார்

    திட்டங்களை விவரித்தார்

    இந்த நிலையில் இவர் தனது தேர்தல் திட்டங்கள் குறித்தும் விவரித்து இருக்கிறார். அதில், இப்போது சிறிய கட்சி தொடங்கி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். அதன் பின் சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் களமிறங்க முடிவெடுத்து இருக்கிறார். இதற்கு இடையில் படத்தில் நடிக்கவும் பிரகாஷ் ராஜ் திட்டமிட்டுள்ளார்.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    அதன்படி பிரகாஷ் ராஜ் படத்தில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட உள்ளார். இவர் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் ஸ்டைலில் அரசியல் செய்வார் என்று கருதப்படுகிறது. கமல்ஹாசன் போல ஒவ்வொரு பகுதியிலும் தனது கட்சியை இவர் வளர்த்தெடுக்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் இந்த லோக்சபா தேர்தலில் சிறப்பாக செயலாற்றியது. அதனால் பிரகாஷ் ராஜ் கட்சி தொடங்க விரும்பி இருக்கலாம் என்கிறார்கள்.

    English summary
    Independent candidate Prakash Raj may follow Kamal in Future to win in politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X