ப்பா என்ன ஒரு ஸ்ட்ராட்டஜி.. மற்ற டீம்களை ஏற்றிவிட்டு.. ஏலத்தில் கேம் ஆடிய சிஎஸ்கே.. நோட் பண்ணீங்களா?
பெங்களூர்: 2022 ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளை ஏற்றிவிட்டு சிஎஸ்கே அணி நுணுக்கமாக இன்று ஏலம் எடுத்தது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடந்து வருகிறது. பல எதிர்பாராத திருப்பங்கள் இந்த ஏலத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.
ஆச்சர்யமாக அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளார். வார்னர் டெல்லி அணிக்கும், டு பிளசிஸ் பெங்களூர் அணிக்கும், தவான் பஞ்சாப் அணிக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணிக்கும் சென்றுள்ளார்.

சிஎஸ்கே
இந்த ஏலத்தில் சிஎஸ்கே இதுவரை பெரிய வீரர்களை எடுக்கவில்லை. ஏலத்தில் பெரிதாக எதிர்பார்த்த வீரர்களை சிஎஸ்கே எடுக்கவில்லை. பெரும்பாலும் சிஎஸ்கே ஏலத்தில் அமைதியாக இருந்தது. ஆனாலும் சிஎஸ்கே பெரிய பிளானோடு வந்துள்ளதாகவே தெரிகிறது. தேவையான வீரர்களை மட்டுமே சிஎஸ்கே குறி வைத்து வருகிறது.4

யார் குறி
வெளிநாட்டு ஓப்பனிங் வீரர்கள் சிஎஸ்கேவின் முக்கியமான குறியாக உள்ளனர். வார்னர், டு பிளசிஸ், டி காக் போன்ற வீரர்களுக்கு சிஎஸ்கே முயல இதுவே காரணம். அது போக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய கூடிய, அதேபோல் பவுலிங்கும் செய்ய கூடிய ஆல் ரவுண்டர் வீரர்களை சிஎஸ்கே குறி வைத்து வருகிறது. தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டருக்கு சிஎஸ்கே முயலவும் இதுவே காரணம்.

சிஎஸ்கே
எல்லா வருடமும் இந்த முறையும் சிஎஸ்கே வயதான வீரர்களை எடுத்தது. உத்தப்பா, பிராவோ போன்ற வயதான வீரர்களை எடுத்தது. சிஎஸ்கே அதேபோல் ஒரு வீரரை எடுக்க முடியவில்லை என்றால் அவர்களின் விலையை முடிந்த அளவிற்கு ஏற்றிவிட்டு கேம் ஆடியது. முதலில் டு பிளசிஸை 4 கோடி ரூபாய் வரை கேட்டது. இதனால் அவரின் விலை உயர்ந்து 7 கோடி வரை சென்றது.
Recommended Video

ஜேசன் ஹோல்டர்
அதேபோல் வார்னர் விலையை 6 கோடி, டீ காக், ஹோல்டர், தீபக் ஹூடா ஆகியோரின் விலையையும் உயர்த்த சிஎஸ்கே காரணமாக இருந்தது. பொதுவாக பல்வேறு அணிகள் இப்படி விலை ஏற்றிவிடும் ஸ்ட்ராட்டஜியை. பயன்படுத்தும். பொதுவாக பஞ்சாப் அணியின் ப்ரீத்தி ஜிந்தா இப்படி ஏல விலையை ஏற்றிவிடுவார். இன்று சிஎஸ்கே அதே ஸ்ட்ராட்டஜியை முயன்றது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications