புழுதி பறக்கும் பாரு! நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியபோது பறந்த 2 டன் மண் துகள்கள்.. இஸ்ரோ விளக்கம்
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய ஊக்கத்துடன் பல்வேறு மிஷன்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய தருணத்தை இஸ்ரோ விவரித்திருக்கிறது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ச்ச்ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர் நிரந்தரமாக உறக்க நிலைக்கு சென்றுவிட்டது. நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே இருக்கும் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ். பொதுவாக அதிக வெப்பநிலையில் பொருட்கள் விரிவடையும், அதிக குளிரில் பொருட்கள் சுருங்கும் என்பது அறிவியல் விதி. இந்த விதியின் அடிப்படையில்தான் விண்கலத்தில் உள்ள பொருட்களும் பாதிப்படைந்திருக்கின்றன. சீனா போன்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் அது ஓராண்டு வரை செயல்படுகிறது என சந்திரயான் லேண்டர் எழுப்ப முடியாமல் போனதற்காக விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.
இந்த வெற்றிக்கு பின்னர் இஸ்ரோவுடன் சேர்ந்து பயணிக்க சர்வதேச நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இப்படி இருக்கையில், சந்திரயான் லேண்டர் தரையிறங்கிய தருணத்தை இஸ்ரோ தற்போது விவரித்திருக்கிறது. அதாவது இந்த தருணத்தை விஞ்ஞானிகள் 15 minutes of terror என்று சொல்வார்கள். ஒரு திட்டத்தின் மொத்த உழைப்பும் இந்த 15 நிமிடங்களில் ஒன்றுமே இல்லாமல் முற்றிலுமாக அழிந்து போக வாய்ப்பிருக்கிறது. இஸ்ரோவுக்கும் லைட்டாக அந்த பயம் இருந்து. ஆனால் அதை கடந்து சந்திரயான் 3 லேண்டர் சரியாக தரையிறங்கிவிட்டது.
நிலவில் சந்திரயான் லேண்டர் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நிலவில் வளிமண்டலம் கிடையாது, எனவே நிலவில் தூசி எங்கு படிந்திருக்கிறதோ அது காலாகாலத்துக்கும் அங்கேதான் இருக்கும். தென் துருவத்திலும் அப்படிதான் இருந்திருக்கிறது. அந்த இடத்தில் லேண்டரின் என்ஜினிலிருந்து நெருப்பு வெளியேறி நிலவின் ஈர்ப்பு விசைக்கு எதிராக லேண்டரை தாங்கி பிடித்து மெதுவாக தரையிறக்கியுள்ளது. அந்த நேரத்தில்தான் மண் துகள்கள் அதிகமாக பறந்திருக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications