இந்திய விண்வெளி துறையில் சாதனை! புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது இஸ்ரோ.. அசத்தும் RLV
பெங்களூரு: செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணையை இன்று இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்திருக்கிறது. இந்த வெற்றி இந்திய விண்வெளி துறையில் குறிப்பிட்டத்தக்க மைல் கல்லாக கருதப்படுகுிறது.
Recommended Video
விண்வெளி துறையை பொருத்த அளவில் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கிறது. இந்தியாவும் சீனாவும் ஒரே காலகட்டத்தில்தான் சுதந்திரம் அடைந்தது. ஆனால் சீனா இன்று தனக்கென ஒரு தனியான ஆய்வு மையத்தை விண்வெளியில் கட்டமைத்து வருகிறது. இந்தியா இந்த அளவுக்கு வளரவில்லை என்றாலும், சில ஐரோப்பிய நாடுகள் செய்ய முடியாத காரியத்தை கூட இந்தியா அசால்ட்டாக செய்து முடித்து வருகிறது.
அதற்கு ஒரு உதாரணம் தான் 36 செயற்கைக்கோள்கள் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட சம்பவம். இருந்தாலும் இந்திய விண்வெளித்துறை பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. தற்போது வரை இஸ்ரோ எந்த மனிதனையும் விண்ணுக்கு அனுப்பவில்லை. இந்தியா சார்பில் சிலர் விண்வெளிக்கு சென்றிருந்தாலும் கூட அவர்கள் சோவித் ரஷ்யாவின் உதவியால்தான் விண்வெளிக்கு சென்றிருக்கின்றனர். எனுவே இஸ்ரோ சுயமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பூமியும் செயற்கைக்கோளும்
அதேபோல பல அதிநவீன தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும். விண்வெளி துறையை பொருத்த அளவில் மொத்தம் 4 வகையான ஆர்பிட்கள் அதாவது சுற்றுவட்ட பாதைகள் இருக்கின்றன. முதலாவது புவிசார் சுற்றுப்பாதை (Geostationary orbit). வானிலையை கண்காணிக்க இந்த இடத்தில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படும். இங்கு நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றாது. ஒரேயொரு இடத்தில் மட்டும் நின்றுக்கொண்டிருக்கும். பூமி சுற்றும் போது அதுவும் சுற்றும்.

ஆர்பிட்கள்
உதாரணத்திற்கு, இந்திய நிலப்பரப்பை பார்த்தவாறு ஒரு செயற்கைக்கோளை நாம் இந்த புவிசார் சுற்றுப்பாதையில் நிறுத்தினால், இந்த செயற்கைக்கோளின் ஃபோகஸ் முழுவதும் இந்தியா மீது மட்டும்தான் இருக்கும். எனவே வானிலை மாற்றத்தை துல்லியமாக கணிக்கலாம். அதேபோல தொலை தொடர்புக்கும் இது பயன்படுகிறது. ஆனால் புவிசார் சுற்றுப்பாதை என்பது பூமியிலிருந்து 35,786 கி.மீ தொலைவாகும். இதற்கடுத்து உள்ள சுற்றுவட்ட பாதை Low Earth orbit எனப்படும் பூமியின் தாழ் வட்டப்பாதையாகும். பூமியின் தரை பகுதியிலிருந்து 160 கி.மீ தொடங்கி 2000 கி.மீக்குள் உள்ள தொலைவுதான் Low Earth orbit என்று வரையறைக்கப்பட்டுள்ளது.

நான்கு வகை ஆர்பிட்கள்
இங்கு செயற்கைக்கோள்களை ஏவ 88 நிமிடங்களிலிருந்து 127 நிமிடங்கள் ஆகும். இந்த பகுதியில்தான் ஏராளமான செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல விண்வெளி நிலையங்களும் இங்குதான் கட்டமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக இருப்பது Medium Earth orbit. அதாவது முதலில் சொன்ன Geostationary orbit மற்றும் இரண்டாவதாக உள்ள Low Earth orbitக்கு இடையில் உள்ள தொலைவுதான் Medium Earth orbit என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து நான்காவதாக இருப்பது Sun-synchronous orbit எனப்படும் சூரியன் ஒத்திசைவான சுற்றுப்பாதையாகும். இது பூமியிலிருந்து 600-700 கி.மீ தொலைவில் இருக்கிறது. ஆக இந்த நான்கு சுற்றுவட்டபாதையில்தான் செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்படுகின்றன.

செயற்கைக்கோள்
இங்கு செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் திரும்பி வருவதில்லை. அதன் சிறு பாகம் கடலில் விழுந்துவிடுகிறது. மீதியுள்ள பாகங்கள் குப்பைகளாக பூமியை சுற்றிவர தொடங்கிவிடுகிறது. சரி இதற்கும் தற்போது இஸ்ரோ நடத்திய சோதனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று கேட்கிறீர்களா? சம்பந்தம் இருக்கு. அதாவது, இந்த ஸ்பேஸ் குப்பைகள் ஏற்கனவே பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மீது மோதலாம். அல்லது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் விண்வெளி வீரர்கள் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

புதிய ராக்கெட்
மட்டுமல்லாது பூமியிலிருந்து விண்வெளியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தொலநோக்கி மூலம் பார்க்கும்போது இந்த குப்பைகள் குறுக்கே வந்து தொல்லை தரலாம். எனவே இதனை குறைக்க ஒரு முறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த வலியுறுத்தலையடுத்து பயன்பாட்டுகு வந்ததுதான் ஃபால்கன் ராக்கெட். இது செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது மணிதர்களையும் விண்ணிற்கு கொண்டு சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பல முறை பயன்படுத்தலாம்.

இந்தியா
அதேபோல உலக நாடுகள் அனைத்தும் ராக்கெட்டுகளை உருவாக்க முயன்றன. அந்த வரிசையில் இருந்த இந்தியா தற்போது இந்த வகை ராகெட்டைதான் உருவாக்கி இன்று பரிசோதனை செய்து காட்டியிருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள சித்ரதுர்காவின் சால்லகெரேயில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இந்த சோதனையை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக நடத்தி காட்டியிருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் எலான் மஸ்க்கின் ராக்கெட்டை விட இது சிறியது. அதேபோல இது ஒரு விமானம் போல ஓடுதலத்தில்தான் தரையிறங்கும். இருப்பினும் இது மிகச் சிறப்பான தொடக்கம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சோதனைக்காக இஸ்ரோவின் ராக்கெட் ஹெலிகாப்டர் மூலம் 4.5 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து கீழே போடப்பட்டது. அப்படி போடப்பட்ட இந்த ராக்கெட் சரியாக தரையிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications