Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. கர்நாடகா தேர்தலில் பாஜகவையே மிரட்டும் ஜனார்த்தன ரெட்டி..பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கனிம ஊழலில் சிக்கி சிறை சென்ற பாஜகவின் முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி ‛கல்யான ராஜ்ய பிரகதி பக்சா' என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கிய நிலையில் 102 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளார். கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு மீது 40 சதவீத ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் இந்த முடிவு ‛தாமரை' கட்சிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அது எப்படி? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

பாஜகவில் மத்திய அமைச்சராகவும், மூத்த தலைவராகவும் இருந்து மறைந்தவர் சுஷ்மா சுவராஜ். இவரது சீஷ்யனாக அறியப்பட்டவர் ஜனார்த்தன ரெட்டி. கர்நாடகா மாநிலம் பல்லாரியை சேர்ந்தவர்.

கடந்த 1999 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கர்நாடகாவின் பல்லாரி தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து பாஜகவில் சுஷ்மா சுவராஜ் களமிறங்கினார். இதில் சுஷ்மா சுவராஜ் தோற்றாலும் கூட அவருக்காக தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து பிரபலமானவர் தான் இந்த ஜனார்த்தன ரெட்டி.

ஜனார்த்தன ரெட்டி

ஜனார்த்தன ரெட்டி

இவர் கடந்த 2008 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பாக முதல் அமைச்சராக இருந்த வேளையில் அவரது அமைச்சரைவில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனார்த்தன ரெட்டி செயல்பட்டார். கனிம சுரங்க தொழில் செய்து வரும் நிலையில் சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்ட புகாரில் ஜனார்த்தன ரெட்டியை சிபிஐ கைது செய்தது. 2015ல் சிறையில் இருந்து ஜாமினில் ஜனார்த்தன ரெட்டி வெளியே வந்தாலும் கூட அவரை பாஜக கண்டுக்கொள்ளவில்லை.

புதிய கட்சி துவக்கம்

புதிய கட்சி துவக்கம்

இந்நிலையில் தான் பாஜகவில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை அறிந்த ஜனார்த்தன ரெட்டி புதிதாக கட்சி துவக்கி உள்ளார். ‛கல்யான ராஜ்ய பிரகதி பக்சா' எனும் கட்சியை அவர் துவக்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ளார். இது தற்போது பாஜகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி வடகர்நாடகாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவார் என கூறப்பட்ட நிலையில் அவர் மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

102 தொகுதிகளில் போட்டி

102 தொகுதிகளில் போட்டி

அதன்படி ஜனார்த்தன ரெட்டி 2023 சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 102 இடங்களில் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் அவர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி வடகர்நாடகாவில் உள்ள 64 தொகுதிகளிலும், தெற்கு கர்நாடகாவில் 38 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதற்கான சர்வேயை ஜனார்த்தன ரெட்டி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

மேலும் தற்போதைய நிலவரப்படி ஜனார்த்தன ரெட்டி கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுதவிர அவரது நண்பரான பிவி சீனிவாச ரெட்டி கெப்பல், ராய்ச்சூர், கலபுரகி தொகுதியில் ஏதேனும் ஒன்றில் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் கட்சி சார்பில் 25 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜனார்த்தன ரெட்டி ஜனவரி 16ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவுக்கு தலைவலி

பாஜகவுக்கு தலைவலி

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் இந்த செயல்பாடு பாஜகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ‛தாமரை' கட்சி வியூகங்கள் வகுத்து வருகிறது. இதற்கிடையே தான் பாஜக மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. இது பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் செயல்பாடும் பாஜகவுக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

2013யை போல் மாறுகிறதா களம்?

2013யை போல் மாறுகிறதா களம்?

ஏனென்றால் கடந்த 2013 தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய பாஜக போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோர் தனிக்கட்சி துவங்கி பல தொகுதிகளில் ஓட்டுக்களை பிரித்தனர். இது அந்த தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து சித்தராமையா முதல்வரானார். தற்போது எடியூரப்பா மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் பாஜகவில் இருந்தாலும் இருவரின் செயல்பாடும் கடந்த 2013 தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் தான் 2023 தேர்தலில் ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சி பாஜகவுக்கு பின்னடைவை கொடுத்து விடுமோ? என்ற கேள்வி பாஜக தலைவர்களிடம் உள்ளது. பாஜக தலைவர்கள் இப்படி நினைப்பதற்கு பின்னணியிலும் முக்கிய விஷயம் உள்ளது. ஏனென்றால் ஜனார்த்தன ரெட்டி பணபலம் மிக்கவர் என்பதோடு, பல்லாரி, கொப்பல், ராய்ச்சூர் உள்ளிட்ட ஆந்திரா-கர்நாடகா பகுதிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ள நிலையில் அது பாஜகவுக்கு பின்னடைவை கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+