ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்.. 6 நிறுவன சொத்து பட்டியல் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல்
பெங்களூர்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களில் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்தனர். தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் 3 பேரும் விடுதலையாகினர்.
இதற்கிடையே தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. இந்த கருவூலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கெடிகாரங்கள், தங்க, வைர நகைகள் இருக்கின்றன.
இந்நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம்விட கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. அதன்படி கிரண் எஸ் ஜாவலியை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்நிலையில் தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் துணை கண்காணிப்பாளர் புகழ் வேந்தன் ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களின் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளையில் கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதா தனது பெயரில் 2 வங்கி கணக்குகளில் தலா ரூ.25 லட்சத்தை வைப்புநிதியாக (Fixed Deposit) வைத்திருந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதனை யாரும் உரிமை கோராத காரணத்தினால் இடைநீக்கம் செய்ததாக கனரா வங்கி தரப்பில் சட்ட ஆலோசகர் ஸ்ரேயா தெரிவித்தார்.
கனரா வங்கியின் இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த கணக்குகளை மீட்டெடுத்து வட்டியுடன் சேர்த்து பெங்களூர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் மாற்றி கொடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு அபராத தொகை, வழக்கு செலவு போக மீதமுள்ள தொகையை வைத்து தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications