பாஜக கூட்டணி: சுக்கு சுக்காக உடையும் கர்நாடகா குமாரசாமி கட்சி- மாநில தலைவர் இப்ராஹிம் போர்க்கொடி!
பெங்களூர்: லோக்சபா தேர்தலுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி (ஜேடிஎஸ்) (JDS) இணைந்ததற்கு அக்கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் சி.எம். இப்ராஹிம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது மதச் சார்பற்ற ஜனதா தளம். இதனால் வரும் லோக்சபா தேர்தல் அக்கட்சிக்கு வாழ்வா? சாவா? என்கிற நிலைமைதான்.

பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ்: இதனால் வேறுவழியே இல்லாமல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது. டெல்லிக்கு சென்ற கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.
பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இந்த முடிவுக்கு அக்கட்சியின் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள், தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அக்கட்சியில் இருந்து ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் விலகிவிட்டனர். மேலும் சில எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போவதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் சிஎம் இப்ராஹிம் நிலைப்பாடு என்ன என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.
ஜேடிஎஸ் மாநில தலைவர் இப்ராஹிம்: இந்நிலையில் இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சிஎம் இப்ராஹிம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சிஎம் இப்ராஹிம் கூறியதாவது: மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் நான். ஆனால் டெல்லிக்கு சென்று பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு திட்டமிட்டே கட்சி தலைமை தெரிவிக்கவும் இல்லை.
பாஜக கூட்டணியால் அதிருப்தி: ஒரு கூட்டணியில் இணைவது என்றால் கட்சியில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த தீர்மானத்துக்கு கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட வேண்டும். மாநில தலைவராகிய நானும் கையெழுத்திட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதுவுமே பின்பற்றப்படவில்லை. இது எங்களை கடுமையாக காயப்படுத்தி இருக்கிறது.
அக்.16-ல் முடிவு அறிவிப்பு: பாஜகவுடனான கூட்டணியை எதிர்க்கும் ஒத்த கருத்துள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் அக்டோபர் 16-ந் தேதி பெங்களூரில் ஒன்று கூடி விவாதிக்க இருக்கிறோம். அதன்பின்னரே எங்கள் முடிவை தேவகவுடா, குமாரசாமியை நேரில் சந்தித்து விளக்கி பொதுமக்களிடம் தெரிவிப்போம். இதுவரை குமாரசாமி, தேவகவுடாவை சந்திக்கவில்லை.
"இந்தியா" கூட்டணியில் ஐக்கியம்?: பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துவிட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அக்டோபர் 16-ந் தேதிக்குப் பின்னர் எங்களது முடிவை தெரிவிப்போம் என கூறியிருக்கிறோம்.
முஸ்லிம்கள் வாக்கு வங்கி: மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் இருந்து முஸ்லிம்கள் விலகிப் போய்விடவில்லை. முஸ்லிம்களின் 20% வாக்குகளை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றிருக்கிறது. சன்னபட்னா சட்டசபை தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகளால்தான் தாம் வென்றதாக குமாரசாமியே தெரிவித்திருந்தார். இவ்வாறு சிஎம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications