காந்தாரா-2 படப்பிடிப்பில் படகு கவிழ்ந்தது.. இப்படியுமா.. ரிஷப் ஷெட்டியை ஆடிப்போக வைத்த 4வது சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ( kantara chapter-1) கன்னட திரை உலகில் பிரபல நடிகரான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து காந்தாரா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. காந்தாரா 2ம் பாகம் ஆரம்பித்தது முதலே அடுத்தடுத்து 3 பேருக்கு நடந்த நிகழ்வு, படக்குழுவினரை ஆடிப்போக வைத்துள்ளது. இது ஒரு புறம் எனில் கர்நாடகாவின் மாணி அணையில் படகு கவிழ்ந்தது. இதில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்பட 30 பேர் தண்ணீரில் விழுந்தனர். நல்ல வேளையாக அனைவரும் உயிர் தப்பினர்.

கன்னட மொழியில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் 'காந்தாரா'. இந்த படத்தை கன்னட திரை உலகில் பிரபல நடிகரான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. எல்லா மொழியிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர்-1' என்ற தலைப்பில் காந்தாரா படத்தின் 2-ம் பாகத்தை தயாரித்து வருகிறார். வழக்கம் போல், அவரது இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Kandhara-2 shooting on a boat in Mani Dam The 4th unexpected incident for Rishabh Shetty

மாணி அணை

காந்தாரா சாப்டர்-1 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று காலை கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணையில் படகில் வைத்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

படகு கவிழ்ந்தது

சிறிய நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க, துணை நடிகர்கள், கேமரா குழுவினர் என 30 பேர் அந்த படகில் இருந்தனர். அந்த பகுதி அதிகம் ஆழம் இல்லாத பகுதி என்று கூறப்படுகிறது. படகில் சென்றவர்கள் யாரும் முழுமையாக நீரில் மூழ்கிவிடாத அளவிற்கு பாதுகாப்பான இடத்திலேயே படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென எந்த படகு கவிழ்ந்தது. இதனால் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்பட அனைவரும் அணை நீரில் தத்தளித்தனர். அவர்களில் சிலர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். மற்றவர்களை அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மீட்பு படையினர் மீட்டனர்.

பல லட்சம் பொருட்கள்

எனினும் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள் மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகள், நவீன எந்திரங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை அணை நீரில் மூழ்கி வீணாகி போயின. ஒரே விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மொத்தமாக வீணாகியது. நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

ரிஷப் ஷெட்டிக்கு நோட்டீஸ்

இந்த விபத்து குறித்த அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் உடனே 'காந்தாரா சாப்டர்-1' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் விபத்து குறித்து நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினருக்கு சிவமொக்கா மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். கடந்த மாதம் காந்தாரா படத்தின் படப்பிடிப்பின்போது 3 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+