டிவி வேணும்.. அப்பறம் இந்தியன் டாய்லெட் செட் ஆகலை.. மீண்டும் சர்ச்சையில் கன்னட நடிகர் தர்ஷன்
பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன், தன்னுடைய ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஏற்கனவே சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறை மாற்றப்பட்ட தர்ஷன், தன்னுடைய செல்லில் டிவி ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவர் கன்னட நடிகர் தர்ஷன் தொகுதீபவின் தீவிர ரசிகர். இவர் தர்ஷனின் பெண் தோழியான பவித்ரா என்பவரை திட்டி மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து ரேணுகாவை கடத்தி வந்து, சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட17 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தர்ஷன் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கொலை வழக்கில் கைதாகியுள்ளோம் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கொண்டாட்ட மனநிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகின.
ஒரு கையில் காபி கோப்பை, இன்னொரு கையில் சிகரெட்டுடன் சுற்றுலா சென்றது போல தர்ஷன் உற்சாகத்தில் இருந்தார். இது சர்ச்சையானதால், தர்ஷன் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். பெங்களூரு காவல்துறை சமீபத்தில்தான், இந்த கொலை வழக்கு தொடர்பாக சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
ஏற்கனவே எக்கச்சக்க சர்ச்சைகளில் சிக்கியதால், தர்ஷன் இனியாவது அமைதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டும் அவர் திருந்தவில்லை. சிறைத்துறை அதிகாரிகளிடம் தர்ஷன், தன்னுடைய செல்லுக்கு ஒரு டிவி கொடுக்க சொல்லி கேட்டுள்ளார்.
"டிவி ஒதுக்கினால், என் வழக்கு சம்மந்தப்பட்ட தகவல்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதேபோல, வெளி உலக நிலவரங்களையும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்." என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சிறை விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் படி அவரது செல்லில் டிவி ஒதுக்க முடிவு செய்துள்ளோம்." என்று கூறியுள்ளனர். இதையடுத்து, தர்ஷன் செல்லுக்கு 32 இன்ச் டிவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சர்ஜிக்கல் சேர் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல இந்தியன் டாய்லெட்டை பயன்படுத்த முடிவதில்லை என்றும் கூறியுள்ளார்.
போன்கால் செய்வதற்கும் அவர் அனுமதி வாங்கியுள்ளார். அவரின் பர்சனல் வங்கிக் கணக்கில் ரூ.35,000 செலுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து இந்த வசதிகளை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்த, மறுபக்கம் குற்ற பத்திரிக்கையில் உள்ள தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தனது ரசிகர் ரேணுகாசாமியை ஆட்கள் வைத்து கடத்தி, ஒரு ரகசிய ஷெட்டுக்கு அழைத்து வந்து, அவரை முதலில் தாக்கியது தர்ஷன் தான். பலரும் இணைந்து இந்த கொடுமையை அரங்கேற்றியுள்ளனர்.
அப்போது ரேணுகாசாமி, 'பசிக்கிறது' என்று கூறியுள்ளார். அதற்கு சிக்கன் பிரியாணி கொடுக்கப்பட்டுள்ளது. அதை ரேணுகாசாமி துப்பியதற்கு, தர்ஷன் அவரை மீண்டும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பவித்ரா தான் இந்த வழக்கின் மூளையாக செயல்பட்டுள்ளார். என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications