சரத்தை விட்டுடாதீங்கம்மா.. உன்னைதான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. கலங்கடிக்கும் சுஷ்மிதாவின் கடைசி மெசேஜ்
கன்னட பாடகி சுஷ்மிதாவின் கடிதம் அதிர்ச்சியை தந்து வருகிறது
பெங்களூரு: "என் சாவுக்கு காரணம் சரத்குமார்தான்.. அவனை விட்டு வைக்காதீங்க.." என்று தன் கணவன் மீது குற்றஞ்சாட்டி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் பிரபல பின்னணி பாடகி சுஷ்மிதா!
சுஷ்மிதா ராஜன்.. இவருக்கு வயது 26 ஆகிறது.. கன்னட திரைப்படத்தில் பின்னணி பாடகி.. எம்பிஏ படித்துள்ளார். திறமை, முயற்சி காரணமாக கன்னட சினிமாவில் நுழைந்தார்.. ஏராளமான பாடல்களையும் பாடினார்... இவரது குரலுக்கென்றே ரசிகர் கூட்டமும் உள்ளது.

இந்நிலையில் சுஷ்மிதாவுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளை பெயர் சரத்குமார்... சாப்ட்வேர் என்ஜினியர்... கூட்டுக்குடும்பத்தில் சுஷ்மிதா அடியெடுத்து வைக்க.. குடும்பம் சந்தோஷமாகவே சென்ற நிலையில், வரதட்சணை பிரச்சனை தலைதூக்கி உள்ளது.
இதில் பொறுக்க முடியாமல்தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. கன்னட திரையுலகம் இன்னும் சுஷ்மிதாவின் மரண செய்தியில் இருந்து மீளவில்லை... குறிப்பாக அவரது உருக்கமான கடைசி கடிதம் அனைவரையும் கலங்க செய்துவிட்டது.
பாடகியாக முன்பு ஆர்க்கெஸ்ட்ராவில் பாடிவந்தார் சுஷ்மிதா.. அப்படி ஒரு நிகழ்ச்சியில் பாடும்போது, சரத் அங்கே வந்தார்.. சுஷ்மியை பார்த்ததும் பிடித்துபோய்தான் வீட்டில் போய் பெண் கேட்டார். இருவீட்டு ஒப்புதலின்படிதான் கல்யாணம் நடந்தது.. திருமண வாழ்க்கையும் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது.
வரதட்சணை பிரச்சனையை ஆரம்பித்தது சரத்தான்.. இதன்பிறகு சரத்குமாரின் வீட்டினரும் தொந்தரவு செய்ய தொடங்கி உள்ளனர்... பலமுறை தனிமையில் அழுதுள்ளார் சுஷ்மிதா.. அவர்கள் கொடுமைப்படுத்தும் போதெல்லாம் காலில் கூட விழுந்து கெஞ்சியுள்ளார்.

இறுதியாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தபிறகுதான், அம்மா வீட்டுக்கு கிளம்பி வந்துள்ளார். இரவு 1 மணிக்கு வாட்ஸ்அப் மெசேஜினை தம்பிக்கும், அம்மாவுக்கும் அனுப்பி வைத்துஅதன்பிறகுதான் தற்கொலை செய்துள்ளார்.. விடிகாலை 5.30 மணிக்குதான் அவரது தம்பி அந்த மெசேஜ்-ஐ பார்த்துள்ளார்.
அந்த மெசேஜ் இதுதான்: "அம்மா, தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க.. சரத், அவங்க அம்மா கீதாவின் பேச்சை கேட்டுக்கிட்டு என்னை சித்ரவதை செய்துவந்தார்... நான் செய்த ஒரு தவறுக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ஆனால், இதை பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை.. என் கணவர் என்னை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்கவில்லை.
எப்ப பார்த்தாலும் சரத் கூச்சல் போட்டுக்கிட்டே இருந்தார்.. வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லியபடியே இருந்தார்.. சரத் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நான் என்ன சொன்னாலும் அதை அவர் கேட்டதே இல்லை.. என்னை சித்ரவதை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினேன்... காலில் கூட விழுந்தேன்..
ஆனால், அதைப்பற்றி அவர் கவலையேப்படவில்லை.. தற்கொலையைக்கூட அவங்க வீட்டில் நான் செய்ய விரும்பல.. அதனால்தான் இங்கு வந்தேன். என் சாவுக்கு அவங்க 3 பேரும்தான் காரணம்... சரத்தை விட்டுடாதீங்க... அவங்க 3 பேருமே தண்டிக்கப்படாவிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்.. என்னை இப்படி தற்கொலை செய்ய வைத்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
Recommended Video
அம்மா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. என்னை நினைச்சு கவலைப்படாதே... தம்பியை நல்லா பார்த்துக்கோ.. தயவுசெய்து என் சடலத்தை பூர்வீக வீட்டில் எரிச்சிடுங்க.. தம்பியே எனக்கு இறுதி சடங்கு நடத்தவேண்டும்" என்று அனுப்பியிருந்தார். சரத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.. அதனால் கர்நாடக போலீசார் அவரை தேடிவருகிறார்கள்..
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications