ஒரு கையில் விஷம்.. மறு கையில் செல்பி.. வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்ட நடிகை.. பகீர் வீடியோ
கன்னட டிவி சீரியல் நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
பெங்களூரு: வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்டார் கன்னட டிவி நடிகை சந்தனா.. முன்னதாக, தன்னுடைய தற்கொலைக்கு தினேஷ்தான் காரணம் என்று விஷம் குடித்து கொண்டே செல்பி வீடியோவில் பதிவு செய்துள்ளார்!!
Recommended Video
பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில், கிருஷ்ணமூர்த்தி லே-அவுட் என்ற பகுதியில் வசித்து வந்தவர் சந்தனா. இவர் கன்னடத்தில் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.. விளம்பரங்களிலும் தோன்றி உள்ளார்.
29 வயதாகிறது.. தினேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகினர், பல இடங்களிலும் சுற்றி திரிந்தனர்.. வீட்டுக்கு விஷயம் திரிந்ததும் இரு தரப்பிலுமே இவர்கள் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார்கள்.
திருமணத்திற்கு மறுத்த காதலன்.. விஷம் குடித்து பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் வீடியோ!

சிகிச்சை
இந்த நிலையில், திடீரென சந்தனா வீட்டில் மயங்கி விழுந்தார்.. வாயில் நுரைதள்ளியபடி துடிதுடித்து கொண்டிருந்த சந்தனாவை அவரது குடும்பத்தினர் கண்டு பதறியடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், எவ்வளவோ சிகிச்சை தந்தும் சந்தனாவை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக அவரது உயிர் ஆஸ்பத்திரியில் பிரிந்தது.

செல்போன்
இந்த தகவல் அறிந்து, சுத்தகுண்டே பாளையா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அவரது செல்போனையும் ஆராய்ந்தனர்.. அதில் ஒரு வீடியோ இருந்தது.. தற்கொலைக்கு முன்பு சந்தனா அதில் பேசியிருந்தார்.. தன்னுடைய தற்கொலைக்கு தினேஷ்தான் காரணம், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொல்லி கொண்டே விஷத்தை குடித்தார்.

கல்யாணம்
இதையடுத்து, தொடர் விசாரணையில், இரு வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாலும், தினேஷூக்கு சந்தனாவை கல்யாணம் செய்ய விருப்பமில்லை.. இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.. மேலும், சந்தனாவிடமிருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக தெரிகிறது.. கல்யாணமும் செய்துகொள்ளாமல், பணத்தையும் திருப்பி தராமல் தினேஷ் ஏமாற்றியதால்தான் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதல்கட்டமாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

பகீர் வீடியோ
சுத்தகுண்டே பாளையா போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஆனால் சந்தனா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தஉடனேயே, தினேஷ் தலைமறைவாகி விட்டார்.. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். ஏற்கனவே லாக்டவுன் பிரச்சனையால் சின்னத்திரை, திரையுலகில் சிலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.. இப்போது தனிப்பட்ட பிரச்சனைகளுக்காகவும் இவர்களின் தற்கொலை தொடர்வது கலையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications