சிஎம் பதவிக்கு மோதல்! கர்நாடகாவில் வேலையை துவக்கிய பாஜக? சித்தராமையா-சிவக்குமாருக்கு எச்சரிக்கை
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் பாஜக வேலையை துவக்கி விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையாவை எச்சரித்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 135 இடங்களில் காங்கிரஸ் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 66 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. ரிசல்ட் வந்து இன்றோடு 4 நாட்கள் ஆனாலும் கூட முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் பதவி மீது சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே போட்டி நிலவுவது தான்.
சித்தராமையா 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தவர். அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். மாறாக டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் அவரது பங்கு சிறப்பானது. இந்நிலையில் தான் இரு தலைவர்களையும் சட்டென புறக்கணித்துவிட முடியாது. இதனால் காங்கிரஸ் மேலிடம் பெரிய அளவில் சிக்கலை எதிர்கொண்டது.
இந்நிலையில் தான் தற்போது இருவரில் ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளனர். இருவரும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் தான் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு காங்கிரஸ் கட்சி மேலிடம் எச்சரிக்கை வழங்கி உள்ளது.
அதாவது மாநிலத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்றதால் அலட்சியமாகவும், பிடிவாதமாகவும் செயல்பட கூடாது. பீதர் முதல் சாம்ராஜ்நகர் வரையிலான எம்எல்ஏக்களை பாஜக தொடர்பு கொண்டுள்ளது என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளதோடு, அலட்சியம் காட்டினால் இழப்பு ஏற்படும் என கடுமையாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகா அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகாவில் 113 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அந்த கட்சிக்கு 66 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். இத்தகைய சூழலில் மீதமுள்ள 47 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுப்பது சாத்தியமில்லை. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இதனை பாஜகவும் விரும்பாது என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவிக்காக தொடர்ந்து மோதினால் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மனதில் வைத்த காங்கிரஸ் மேலிடம் இருவரையும் எச்சரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications