17 வயது தான்.. செல்போன் ஆசைக்காட்டி மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்.. கர்நாடகாவில் ஷாக்

என்னை நேரில் சந்திக்க வந்தால் புதிய செல்போன் தருகிறேன் என இளைஞர் கூறியதால் மைனர் பெண் அவரை பார்க்க சென்றார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 17 வயது மைனர் பெண்ணிடம் பழகிய இளைஞர் ஒருவர் புதிய செல்போன் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். சமீபத்தில் இவருக்கும் தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பழக்கமானார். இருவரும் நண்பர்களான நிலையில் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர்.

இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி நட்பை வளர்த்து வந்துள்ளனர். இந்த வேளையில் மைனர் பெண் மீது இளைஞர் ஆசை கொண்டுள்ளதாக தெரிகிறது.

 புதிய செல்போன் தருவதாக..

புதிய செல்போன் தருவதாக..

இதையடுத்து அந்த இளைஞர் மைனர் பெண்ணிடம் பேசும்போது ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதாவது என்னை சந்திக்க வந்தால் புதிய செல்போன் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இளைஞர் கூறியபடி மைனர் பெண்ணும் தான் வசிக்கும் கிராமத்தில் இருந்து அவரை சந்திக்க தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள நேரு ஸ்டேடியத்துக்கு சென்றார்.

 ஓட்டலில் சாப்பாடு

ஓட்டலில் சாப்பாடு

அப்போது மைனர் பெண்ணின் நண்பரும் இன்னொருவரும் அங்கு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மைனர்பெண்ணிடம் பேசினர். அப்போது, ஓட்டலில் சாப்பிடலாமா? என கேட்டனர். இதற்கு மைனர்பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கோகுல் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர்.

 கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

இதையடுத்து மைனர்பெண்ணை அவர்கள் கதக் ரோட்டுக்கு அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தாக்கி பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் தன்னை விடும்படி கேட்டும் கூட அவர்கள் 2 பேரும் மனம் இறங்கி வரவில்லை. அதோடு அவர்கள் இன்னும் 2 நண்பர்களை போன் செய்து அங்கு வரவழைத்தனர். அவர்கள் 2 பேரும் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 மிரட்டி 4 பேர் கும்பல்

மிரட்டி 4 பேர் கும்பல்

மேலும் சம்பவம் குறித்து வெளியே கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் 4 பேரும் மைனர் பெண்ணை மிரட்டிவிட்ட சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மைனர் பெண் சம்பவம் குறித்து கோகுல்ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

அதிரடி கைது

அதிரடி கைது


மேலும் மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் 22 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+