38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்
பெங்களூரு: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சௌதான்ஹள்ளி கிராமத்தில் குரங்குகளுககு நடந்த கொடுமையின் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹாசன் மாவட்டத்தின் சௌதான்ஹள்ளி கிராமத்தில் கிராமத்தில் 38 குரங்குகளை விஷம் வைத்து கொடூராமாக தாக்கி கொன்றுள்ளனர் சில காட்டுமிராண்டிகள். இந்த துயர சம்பவத்தில் 20 குரங்குகள் காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றன.
இச்சம்பவம் பற்றி ஹாசன் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 50க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுத்துள்ளார்கள். சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு, சௌதான்ஹள்ளி கிராமம் அருகே சாலையோரத்தில் சில கயவர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

குரங்குகள் கொலை
காட்டுமிராண்டித்தனமான இந்த செயலில் காயமடைந்த 20 குரங்குகளுக்கு உடனடியாக கிராமவாசிகள் தண்ணீர் வழங்கினர். மொத்தம் 38 குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன என்றார்கள்.

வழிபோக்கர்கள்
எப்படி தெரியவந்தது. இந்த சம்பவம் எப்படி வெளியே தெரிந்து என்றால், சாலையோரத்தில் கிடந்த சாக்கு பைகள் இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த வழிப்போக்கர்கள், அவற்றைத் திறக்கும்போது உள்ளே குரங்குகள் செத்தும் சில உயிருக்கு போராடிய படியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குரங்குள் சாவு
இந்த சம்பவம் பற்றி கிராமவாசிகள் கூறுகையில், சாக்குப் பைகளில் அடைத்த பின்னரே குரங்குகள் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்.. உயிருடன் இருந்த சில குரங்குள் மூச்சு திணறியபடி இருந்தன. மற்றவை நகர முடியமால் செத்துக்கிடந்தன என்றார்கள்.

போலீஸ் விசாரணை
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த மூத்த வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்த குரங்குகளை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குரங்குகள் விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications