கர்நாடகா: புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பரசன் இன்று திடீரென தமது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை.
இதனால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டார். கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவராக இருப்பவர் அன்பரசன். இதனை காரணம் காட்டி தேர்தல் ஆணையத்திடம் சென்று அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரினார் எடப்பாடி பழனிசாமி. இதனடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. பின்னர் இந்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது பாஜக கேட்டுக் கொண்டதால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பஆஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கர்நாடகா தேர்தலில் புலிகேசி நகர் வேட்பாளர் அன்பரசனை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் அன்பரசன் தமது வேட்புமனுவை திரும்பப் பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications