கர்நாடகா சட்டசபை தேர்தல்: இழுபறிக்குப் பின் 42 வேட்பாளர்களுடன் காங். 2-ம் கட்ட பட்டியல் வெளியானது!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 42 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் மே 10-ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்று, மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 93 இடங்களுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு குழப்பங்களால் சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாம்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று மீண்டும் கூடி ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் கூறுகையில், தேர்தல் தொடர்பான குழு மீண்டும் கூடுகிறது. வேட்பாளர்களை எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவித்துவிடுவோம் என்றார்.
தற்போது வேட்பாளர் பட்டியலில் இழுபறி தொடருவதால் எஞ்சிய 100 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்று 42 வேட்பாளர்களை கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் பாஜக எம்.எல்.சி பாபுராவ் சின்சன்சூருக்கு குர்மிட்கல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. சித்தராமையா முன்னர் போட்டியிட்ட பதாமி தொகுதியில் பீமசென் சிம்மன்னகட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாகல்கோட்டில் ஹூல்லப்ப மெதி, மாண்டியாவில் ரவிக்குமார், கொள்ளேகாலில் ஏஆர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவ்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிட்டூர்- பாபாசாகேப் டி பாட்டீல், முதொல்- ராமப்பா பாலப்ப திம்மாபூர், பீஜப்பூர் நகரம்- அப்துல் ஹமீத், பத்மநாப நகர்- ரகுநாத நாயுடு, யெலகங்கா- கேசவ ராஜண்ணா, யஷ்வந்தபுர- எஸ் பால்ராஜ் கவுடா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 124 வேட்பாளர்கள் பட்டியலில் மூத்த தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். வருணா தொகுதியில் சித்தராமையா, கனகபுராவில் டிகே சிவகுமார், கோரடகெரேவில் ஜி பரமேஸ்வரா, பாபலேஸ்வரில் எம்பி பாட்டீல், சிதாப்பூரில் கார்கே மகன் பிரியங் கார்கே, காந்தி நகரில் தினேஷ் குண்டுராவ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications