கர்நாடகா தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் காங்.- கோலார் கனவில் சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று காங்கிரஸ் வெளியிடுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வருணா தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2-வது தொகுதியாக கோலார் ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பதும் எதிர்பார்ப்பு.
கர்நாடகா சட்டசபையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்; மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க கடுமையாக போராடுகிறது. பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களில் 8 முறை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் எப்படியும் நம்ம ஆட்சிதான் என்பதில் காங்கிரஸ் மிகவும் நம்பிக்கையாக உள்ளது.
கர்நாடகா பாஜக அரசின் இடஒதுக்கீட்டு குழப்பங்கள், உட்கட்சி மோதல்கள் இவை அனைத்தும் அந்த கட்சியை வீழ்த்த போதுமான காரணங்கள் என நம்புகிறது காங்கிரஸ். அத்துடன் ஜாதிய அடிப்படையிலான கர்நாடகாவின் வாக்குகள் இம்முறை பாஜகவுக்கு சாதகமாக இருக்காது என்பதும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு. குறிப்பாக லிங்காயத் ஜாதி வாக்குகளின் முகமான, எடியூரப்பா தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதும் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் காங்கிரஸ் சாதகமான ஒன்றாகப் பார்க்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் எப்படியும் முதல்வர் பதவி கிடைத்துவிடும் என்ற கனவில் இருக்கிறது ஜேடிஎஸ்.
ஜேடிஎஸ் கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸும் 124 வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக வரும் 8-ந் தேதி வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தமது 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸில் முதல்வர் பதவி தமக்கே என இலவு காத்துகிடக்கும் சித்தராமையா ஏற்கனவே வருணா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் தாம் 2-வதாக கோலார் தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறேன் என அடம்பிடித்து வருகிறார். சித்தராமையாவின் இந்த வற்புறுத்தலுக்கு காங்கிரஸ் மேலிடம் க்ரீன் சிக்னல் தருமா? என்பது இன்றைய வேட்பாளர் பட்டியலில் தெரிந்துவிடும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications