அடடே! ஓவைசி கட்சியுடன் கூட்டணி குறித்து ஜேடிஎஸ் பேச்சுவார்த்தை- மாஜி முதல்வர் குமாரசாமி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளது. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி இம்முறை 224 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என அறிவித்துள்ளது. பொதுவாக ஜேடிஎஸ் கட்சிக்கு பழைய மைசூர் மாகாணத்தில் ஒக்கலிகா கவுடா ஜாதியினர் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளில்தான் கணிசமான இடங்கள் கிடைத்து வருகிறது. இதனை பயன்படுத்தி பாஜக அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை பெருமளவு அறுவடை செய்யக் கூடும் என கூறப்படுகிறது.
பொதுவாக ஒக்கலிகா கவுடா ஜாதி, சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவு காங்கிரஸுக்கு கிடைத்தால் அக்கட்சி எளிதாக ஆட்சி அமைக்கும் என்பது எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் கிங் மேக்கர் ஸ்தானத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க ஜேடிஎஸ் கட்சியும் போராடிக் கொண்டிருக்கிறது.

இதன் ஒருபகுதியாக முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜேடிஎஸ் முயற்சித்து வருகிறது. ஓவைசி கட்சியானது கர்நாடகா தேர்தலில் குறைந்தது 25 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தை மையமாக கொண்ட கட்சியாக இருந்தாலும் பிற மாநிலங்களிலும் செல்வாக்கை காட்ட ஓவைசி கட்சி முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளில் பீகார் மட்டும்தான் ஓவைசி கட்சிக்கு வெற்றி சாத்தியமானது. ஆனாலும் விடா முயற்சியாக கர்நாடகாவிலும் செல்வாக்கை காட்ட விரும்புகிறது ஓவைசி கட்சி.
ஓவைசி கட்சியுடனான கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, கூட்டணி தொடர்பான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஓவைசி கட்சிக்கு 4 அல்லது 5 தொகுதிகள் ஒதுக்கலாம் என்கிற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஓவைசி கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடருகிறது என்றார்.
மேலும் ஹாசன் தொகுதி யாருக்கு என்பதில் ஜேடிஎஸ் கட்சிக்குள் குறிப்பாக குமாரசாமி குடும்பத்துக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, எங்களுக்காவது ஒரு ஹாசன் தொகுதியில்தான் பிரச்சனை.. பாஜகவுக்கோ 100 ஹாசன் தொகுதிகள் அதாவது அத்தனை தொகுதிகளில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்றார் குமாரசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications