கர்நாடகாவில் மாறும் ஆட்சி? பாஜகவை முந்தும் காங்கிரஸ்! பப்ளிக் டிவி கருத்து கணிப்பு இதுதான்! ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ள பப்ளிக் டிவி தேர்தலுக்கு முன்பாக மேற்கொண்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 3வது கட்சியாக வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் 2018 ல் நடந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்த சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே மாதம் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்க உள்ளது. ஏப்ரல் 20 வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 21ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனையும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 24ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேஜிக் நம்பர் 113
கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேஜிக் நம்பராக 113 உள்ளது. அதாவது ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு கர்நாடகாவில் தேவையாகும். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அரசியல் குழப்பம் நிலவிய நிலையில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைத்தன. இந்த கூட்டணியின் முதல்வராக ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி இருந்தார்.

4 முனை போட்டி
இந்த கூட்டணி ஆட்சி ஓராண்டுக்கு பிறகு கவிழ்ந்தது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் இந்த ஆட்சி கலைந்தது. இதையடுத்து பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தற்போது வரை சுமார் 4 ஆண்டுகள் பாஜகவின் ஆட்சி கர்நாடகாவில் நடக்கிறது. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் முயன்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஆம்ஆத்மி கட்சியும் புதிய வரவாக கர்நாடகாவில் நுழைந்துள்ளது. இந்த முறை ஆம்ஆத்மியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் 4 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும்.

வேட்பாளர் அறிவிப்பில் தீவிரம்
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் 93 தொகுதிகளுக்கும், ஆம்ஆத்மி கட்சி 140 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுதவிர பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. இருப்பினும் பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி பாஜகவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பப்ளிக் டிவி கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் கர்நாடகாவில் முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ள பப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடம்?
இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 98 முதல் 108 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் அதனை காங்கிரஸ் கட்சி எட்டவில்லை. இருப்பினும் காங்கிரஸ் கட்சி தான் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவாகலாம் என கருத்து கணிப்பு கூறியுள்ளது.

பின்தங்கிய பாஜக, ஜேடிஎஸ்
மேலும் பாஜக 85 முதல் 95 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பின்தங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஜேடிஎஸ் கட்சி 28 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது கட்சியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் ஓல்டு மைசூர் மண்டலத்தில் இந்த முறையும் செல்வாக்கை தக்க வைத்துள்ளது. அங்கு மட்டும் சுமார் 25க்கும் அதிக தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெறலாம் என கருத்து கணிப்பு கூறியுள்ளது. இதுதவிர மாநிலத்தில் மற்றவர்கள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் இடங்களை பெற வியூகம்
இந்த கருத்து கணிப்பின்படி ரிசல்ட் அமைந்தால் மீண்டும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை தான் அமையும். இத்தகைய சூழலில் கர்நாடகாவில் ஆட்சியை நிர்ணயம் செய்யும் கிங்மேக்கராக மீண்டும் ஜேடிஎஸ் கட்சி மாறும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் தொங்கு சட்டசபை உருவாகாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றன. இது எந்த அளவு அவர்களுக்கு கைக்கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications