முதல்வர் பதவியை நெருங்கிய சித்தராமையா! வருணாவில் அசத்தில் வெற்றி.. பாஜக அமைச்சர் சோமண்ணா படுதோல்வி
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் முதல்வர் பதவியை தட்டித்தூக்க சித்தராமையா தயாராக உள்ளார். அவரை தோற்கடிக்க பாஜக சார்பில் அமைச்சர் சோமண்ணா நிறுத்தப்பட்டார். இந்நிலையில் தான் சோமண்ணாவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் சோமண்ணாவை எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார் என்பது பற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறலாம் எனவும், பாஜக இந்த முறை காங்கிரஸை ஒப்பிடும்போது குறைந்த இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் என கருத்து கணிப்புகள் கூறின.

மேலும் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய தான் அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதற்கிடையே தான் காங்கிரஸ், பாஜகவினர் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கர்நாடகாவில் சில நட்சத்திர தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை தான் அனைவரும் எதிர்பார்த்தனர். இதில் ஒன்று தான் மைசூர் மாவட்டம் வருணா சட்டசபை தொகுதியாகும். இந்த தொகுதியில் தான் தற்போதைய எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா போட்டியிடுகிறார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் சித்தராமையாவை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்தது. அதன்படி வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணாவை வருணாவில் களமிறக்கியது. மேலும் அவருக்கு இன்னொரு தொகுதியான சாம்ராஜ்நகரிலும் பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியது. வருணா தொகுதியில் சுமார் 70 ஆயிரம் லிங்காயத் ஓட்டுகள் உள்ளன. லிங்காயத் பொதுவாக பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. அதோடு சோமண்ணாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதனால் தான் சோமண்ணாவை பாஜக களமிறக்கியது.
மாறாக வருணா தொகுதியை பொறுத்தமட்டில் ஒக்கலிகர் சமுதாயத்துக்கு 12 ஆயிரம் ஓட்டுகள், சித்தராமையாவின் குருபா சமுதாயத்துக்கு 35 ஆயிரம் ஓட்டுகள், எஸ்சி சமுதாயத்துக்கு 43 ஆயிரம் ஓட்டுகளும், எஸ்டி சமுதாயத்துக்கு 23 ஆயிரம் ஓட்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 12 ஆயிரம் ஓட்டுகளும் உள்ளன. இதில் எஸ்சி, எஸ்டி மற்றும் குருபா ஓட்டுகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிகம் கிடைக்கும். மாறாக லிங்காயத் சமுதாய ஓட்டுகள் பாஜகவுக்கும், ஒக்கலிகர் ஜேடிஎஸ் கட்சிக்கும் அதிகமாக கிடைத்தாலும் மற்றவர்களின் ஓட்டுகளை சித்தராமையா அறுவடை செய்யலாம்.
இத்தகைய சூழலில் தான் வருணாவில் எடியூரப்பாவின் மகன் யதீந்திராவை போட்டியிட வைக்க பாஜக விரும்பியது. ஆனால் எடியூரப்பா மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அமைச்சர் சோமண்ணா, சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். வருணா என்பது சித்தராமையாவின் சொந்த தொகுதியாகும். மேலும் எஸ்சி, எஸ்டி, அவர் சார்ந்த குருபா சமுதாயம் மற்றும் சொந்தஊர் பலம் உள்ளிட்டவை சித்தராமையாவுக்கு பலமாக இருக்கிறது. இதனால் அவரை சோமண்ணாவால் வீழ்த்துவது கஷ்டம் தான் என்ற பேச்சு இருந்தது.
முன்னதாக வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து சோமண்ணா வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பது குறித்த தேர்தல் பிரசார வேளையில் பல்வேறு டிவி சேனல்களின் ரிப்போர்ட்டர்கள் அங்குள்ள மக்களிடம் பேட்டி கண்டனர். அப்போது அனைவரும் கூறியது ஒன்றே ஒன்று தான். வருணா என்பது சித்தராமையாவின் கோட்டை. மேலும் அவரது சொந்த தொகுதி. 2008, 2013ல் இந்த தொகுதிகளில் சித்தராமையா வெற்றி பெற்றார்.
கடந்த2018ல் அவரது மகன் யதீந்திரா வெற்றி பெற்றார். முதல்வராக இருந்த சமயத்தில் சித்தராமையா தொகுதிக்கு அதிக வளர்ச்சி பணி, திட்டங்களை செய்தார். இதனால் இந்த முறையும் சித்தராமையா தான் வெல்வார். மோடி, அமித்ஷா என பாஜகவில் யார் வந்தாலும் கூட சித்தராமையாவுக்கு தான் மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றனர். மேலும் சோமண்ணா வெளிமாவட்டம் (பெங்களூர்) சேர்ந்தவர். அவருக்கு இந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

இத்தகயை சூழலில் தான் இன்று கர்நாடகாவில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வருணாவில் சித்தராமையா வெற்றி பெற்றார். சித்தராமயைா 1 லட்சத்து 19 ஆயிரத்து 816 ஓட்டுகள் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் சோமண்ணா 73 ஆயிரத்து 653 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். சோமண்ணாவை சித்தராமைா 46 ஆயிரத்து 163 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதேபோல் சாம்ராஜ்நகர் தொகுதியிலும் சோமண்ணா தோல்வியடைந்தார். அங்கு சோமண்ணாவை காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்கசெட்டி வீழ்த்தினார். இதன்மூலம் சோமண்ணா 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.
மேலும் தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெற்றுள்ளதால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் நிலையில் அதில் இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதனால் முதல்வர் பதவியை சித்தராமையா நெருங்கிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications