கர்நாடகா தேர்தல்: 'ட்விஸ்ட்' காந்திநகரில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர் அதிமுக வேட்பாளராக அங்கீகரிப்பு?
பெங்களூர்: கர்நாடகாவில் ஓபிஎஸ் அணி சார்பில் காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காந்திநகரில் அதிமுக வேட்பாளர் என குறிப்பிட்டு குமாரை தேர்தல் ஆணையம் அங்கிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில் ஆளும் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக விரும்பியது.ஆனால் பாரதிய ஜனதா இதை ஏற்கவில்லை. இதனால் அதிமுக தனித்து களம் காண விரும்பியது.
அதன்படி, புலிகேசி நகரில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அதன்படி, புலிகேசிநகர் தொகுதியில் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அதன்படி, நடைபெற்ற வேட்பு மனுவில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார். அதே வேளையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர் செல்வமும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.
புலிகேசிநகர், காந்திநகர், கோலார் தங்கவயல் ஆகிய தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்களை அறிவித்தார். புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜாவும் ஒபிஎஸ் அணி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது இன்று புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வங்கி கணக்கு இல்லாதது, ஆவணங்களில் கையெழுத்து போடாமல் இருந்தது என முறையாக ஆவணங்கள் இல்லாத காரணங்களால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. எனினும், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜாஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காந்திநகரில் அதிமுக வேட்பாளராக குமாரை தேர்தல் ஆணையம் அங்கிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, வேட்பாளர் பெயர் பட்டியலில், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளரான குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கும் நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக என குறிப்பிட்டு இருப்பது பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் அனந்தராஜாவின் மனு ஏற்கப்பட்டு இருந்தாலும், அவருக்கு அதிமுக எனக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications