ஒக்கலிகா மடாதிபதியால் அவமானம்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்க.. சித்தராமையாவுக்கு பாஜக அட்வைஸ்!
பெங்களூர்: அரசு விழாவில் ஒக்கலிகா ஜாதி மடாதிபதியால் அவமதிக்கப்பட்ட முதல்வர் சித்தராமையா இனியும் அப்பதவியில் நீடிக்காமல் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா அரசின் கெம்பே கவுடா ஜெயந்தி விழாவில் பேசிய ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமி, முதல்வர் பதவியை சித்தராமையா, டிகே சிவகுமாருக்கு விட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தியதுதான் சர்ச்சைக்கு காரணம்.
கர்நாடகா அரசின் கன்னட மொழி வளர்ச்சித் துறை சார்பில் பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவின் 515-வது ஜெயந்தி விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில் பேசிய ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமி, முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவியை ஏற்கனவே அனுபவித்தவர். ஆகையால் இனி டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும். அப்படி செய்வதுதான் சித்தராமையாவுக்கும் நல்லது. முதல்வர் பதவியை டிகே சிவகுமார் அனுபவிக்கவில்லை. அதனால்தான் டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்கிறோம் என்றார்.

ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்தப் பேச்சு சித்தராமையா ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. பேசிய ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமிக்கு சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாஜகவும் களமிறங்கி இருக்கிறது. பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குமார், ஒக்கலிகா மடாதிபதியை டிகே சிவகுமார்தான் தூண்டிவிட்டு பேச வைத்திருக்கிறார். அரசு விழா மேடையிலேயே சித்தராமையா அவமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதியில் டிகே சிவகுமாரின் தம்பி தோல்வி அடைய யார் காரணம் என்பது டிகே சிவகுமாருக்கு தெரியும். மடாதிபதிகளை தமக்கு ஆதரவாக பேசவைப்பது டிகே சிவகுமாரின் அரசியல் தந்திரம். கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையா கோஷ்டி தனியாகவும் டிகே சிவகுமார் கோஷ்டி தனியாகவும் செயல்படுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மேலும் முதல்வர் பதவியில் சித்தராமையா நீடிக்க வேண்டாம். முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். அரசு விழாவில் இத்தகைய அவமானத்தை யாரும் சந்தித்ததும் இல்லை என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications