கர்நாடகா தேர்தல் தோல்வி! பாஜக தலைமைக்கு எதிர்ப்பு.. எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட 11 பேருக்கு நோட்டீஸ்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதற்கிடையே தான் கட்சி மேலிடத்துக்கு எதிராக எம்பி, எம்எல்ஏக்கள் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்எல்ஏ, பிரதாப் சிம்ஹா எம்பி உள்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் சமயத்திலும், அதற்கு பிறகும் சில தலைவர்கள் தொடர்ந்து கூறும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

அதாவது கர்நாடகா பாஜகவில் கோஷ்டி பூசல் இருப்பதை அவர்களின் கருத்து உறுதி செய்யும் வகையில் உள்ளது. மேலும் ஒவ்வொருவரும் வெளிப்படையாக பொதுவெளியில் கட்சி தலைவர்களை குற்றம்சாட்டி வருகின்றனர். இது பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக முன்னாள் எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோசுக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். அதேபோல் சர்ச்சைக்கு பெயர் பெற்ற பசனகவுடா பட்டீல் யத்னால் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சிக்கு எதிராக பேசியிருந்தனர்.
இந்த நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருத்துக்களை பகிரங்கமாக பேசியதாக கூறி மைசூர் குடகு எம்பி பிரதாப் சிம்ஹா, பசனகவுடா பட்டீல் யத்னால் எம்எல்ஏ, சரன்டிமத், தாசரஹள்ளி முனிராஜு, ரமேஷ் கவுடா, ஏஎஸ் பட்டீல் நடஹள்ளி, ரேணுகாச்சார்யா எம்எல்ஏ உள்பட 11 பேருக்கு பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில் அவர்களின் பேச்சு குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் கேட்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தலைவர்கள் விளக்கம் அளித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபற்றி கர்நாடகா பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியதாவது:
கூறுகையில், ‛‛கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் பகிரங்கமாக கருத்து கூறிய எம்எல்ஏக்கள், எம்பி, உள்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications