நக்சல் தெலுங்கானாவுக்கு இடம் மாறுவீங்களா?பெங்களூர் ஐடி கம்பெனிகளுக்கு கர்நாடகா பாஜக தலைவர் மிரட்டல்!
பெங்களூர்: நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு ஐ.டி. நிறுவனங்கள் இடம் பெயர்ந்தால் தாக்கு பிடிக்கவே முடியாது என கர்நாடகா பாஜக மூத்த தலைவர் என்.ஆர்.ரமேஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.
பெங்களூர் புறநகர் பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கின்றன. மகாதேவபுரா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

பெங்களூர் கனமழை வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவை புறநகரில் உள்ள ஐடி நிறுவனங்கள்தான். ஐடி நிறுவன ஊழியர்கள், டிராக்டர்களில் பணிக்கு செல்லும் பரிதாபம் ஏற்பட்டது. இத்தகைய நிலைமையை எதிர்காலத்தில் சமாளிக்க ஐடி நிறுவனங்கள் படகுகளை வாங்குவதற்கும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
அத்துடன் பல ஐடி நிறுவனங்கள் பெங்களூர் நகரை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. பெங்களூர் ஐடி நிறுவனங்களின் இந்த முடிவு தொடர்பாக கர்நாடகா பாஜக மூத்த தலைவர் ரமேஷ் கூறியதாவது: கடந்த 3 மாதங்களில் பெங்களூர் 899 மிமீ மழையை பெற்றுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
இப்போது ஐடி நிறுவனங்கள் கர்நாடகா மாநில அரசை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. கர்நாடகாவை விட்டு வெளியேறி தெலுங்கானா மாநிலத்துக்கு போகிறோம் என்கின்றன ஐடி நிறுவனங்கள். தெலுங்கானா மாநிலம் என்பது நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலம். நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தெலுங்கானாவில் ஐடி நிறுவனங்களாள் தாக்குப் பிடிக்க முடியாது.
இப்போது பெங்களூர் நகரை காப்பாற்றுங்கள் என பிரசாரம் செய்வீர்கள். பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதுவீர்கள். இன்னொரு பக்கம் தெலுங்கானாவுக்கு போவோம் என மிரட்டலும் விடுப்பீர்கள். பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை கர்நாடகா அரசுகள் வாரி வழங்கி உள்ளன.
பெங்களூர் நகர பெருவெள்ளத்துக்கு காரணமே இந்த் ஐடி நிறுவனங்கள்தான். 100க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆக்கிரமிப்பை செய்துள்ளன. முதலில் ஐடி நிறுவனங்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை கைவிட வேண்டும். அப்படி செய்தால்தான் பிரச்சனைக்கு தீர்வு காணவும் முடியும். இவ்வாறு என்.ஆர்.ரமேஷ் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications