மைசூரு தசராவில் பெரியார் போட்டோவா? சித்தராமையா மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக எம்எல்ஏ போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா நேற்று ஜம்பு சவாரி எனும் யானைகள் ஊர்வலத்துடன் முடிவடைந்தது. முன்னதாக மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக நடந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பெரியார் போட்டோ இடம்பெற வைத்ததாக கூறி கர்நாடகா பாஜக எம்எல்ஏ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு முதலமைச்சர் சித்தராமையா, கன்னட கலாசாரத்துறை அமைச்சர் ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்றைய தினம் ஜம்மு சவாரி எனும் யானைகள் ஊர்வலம் நடந்தது. மைசூரு சாமூண்டேஸ்வரி கோவிலில் இருந்து சாமூண்டேஸ்வரி அம்மன் சிலையை சுமந்து யானைகள் அணிவகுத்து வந்தன.

mysuru dasara periyar bjp

முன்னதாக கடந்த 10 நாட்களாக தினமும் மைசூரு தசராவில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. அதுமட்டுமின்றி கர்நாடகா மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் பெரியாரின் போட்டோவும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பெரியாரின் போட்டோ இடம்பெற்றிருப்பதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு தசரா விழாவின் அலங்கார ஊர்தியில் பெரியார் போட்டோவை இடம்பெற வைத்ததற்காக முதல்வர் சித்தராமையா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ள பாஜக எம்எல்ஏ பசனகவுடா பட்டீல், பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெரியார் இந்து கடவுளை அவமதித்தவர். வளர்ப்பு மகளையே திருமணம் செய்தவர் என அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு என்ன செஞ்சீங்க? காங்கிரஸ் அரசை விளாசிய சொந்த கட்சி எம்எல்ஏ! தற்கொலை மிரட்டல்


இதுபற்றி முன்னாள் மத்திய இணையமைச்சரும், கர்நாடகா மாநிலம் விஜயாப்புரா சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவுமான பசனகவுடா பட்டீல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தசரா விழாவின் அலங்கார ஊர்தியில் பெரியார் ராமசாமியின் போட்டோவை காங்கிரஸ் அரசு இடம்பெற செய்தது கடும் கண்டனத்துக்கு உரியது. சமூக சீர்திருத்தவாதியாக வேஷம் போட்ட ராமசாமி தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொண்டவர்.

மனைவி சொல்லே மந்திரம்! கேரளா லாட்டரியில் கர்நாடகா மெக்கானிக் ரூ.25 கோடி வென்றது எப்படி? சுவாரசியம்


1971ம் ஆண்டு சேலம் போராட்டங்களில் (ராமசாமி தலைமையில் ஒரு மூடநம்பிக்கை எதிர்ப்பு பேரணி) ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்து கடவுள்களை அவமானப்படுத்தினர். இந்த கேவலமான செயலின் புகைப்படங்களை துக்ளக் இதழ் படம்பிடித்து வெளியிட்டது. ராமசாமி விநாயகர் சிலைகளை உடைத்தார்.ராமரை செருப்பால் அடித்தனர். படிப்பறிவு அற்ற அவர்கள் இன்றும் கூட அதனை தொடர்கின்றனர். தற்செயலாக அல்லது தெரிந்தே ராமசாமியை ஆதரித்த திமுகவும் அதனை தெரிவித்துள்ளது.

மனைவி வங்கி கணக்கிற்கு வந்த ரூ.999 கோடி! இன்ப அதிர்ச்சியான டீக்கடைகாரரருக்கு வந்த புது பிரச்சனை


இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று ராமசாமி விரும்பினார். இந்தியாவின் சுதந்திரத்தை அவர் விரும்பவில்லை. 1947 ஆகஸ்ட் 15ம் தேதியை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அறிவித்தார். அதோடு இனி திராவிடர்களை வடநாட்டினர் மற்றும் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் செலுத்திய ஆரியர்கள் ஆளுவார்கள் என்று கூறினார். ராமசாமியை காங்கிரஸ் பெருமைப்படுத்தி இருப்பது என்பது இந்துக்களை அவமானப்படுத்துவது மட்டுமின்றி சாமூண்டீஸ்வரி அம்மனையும் அவமதிக்கும் செயலாகும்.

சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய மற்றும் இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை கேலி செய்த ஒருவரை பாராட்டியதற்காக முதல்வர் மற்றும் கன்னட கலாச்சார அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடகா எப்போதும் சரணாரு மற்றும் தாசருவின் பூமியாகவே இருக்க வேண்டும். பெரியார் மற்றும் அவரை பின்பற்றுவோரின் பூமியாக இருக்க கூடாது’’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+