மனைவி சொல்லே மந்திரம்! கேரளா லாட்டரியில் கர்நாடகா மெக்கானிக் ரூ.25 கோடி வென்றது எப்படி? சுவாரசியம்
பெங்களூர்: கேரள திருவோணம் பம்பர் லாட்டரி ரிசல்ட்டில் முதல் பரிசான ரூ.25 கோடியை கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் அல்தாப் பாஷா வென்றுள்ளார். இந்நிலையில் தான் கேரளா திருவோணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசுத்தொகை கிடைக்க முக்கிய காரணம் அவரது மனைவி தான் என்பதும், மனைவியின் பேச்சை கேட்டதால் தற்போது அவர் கோடீஸ்வரராக மாறி உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு நடைமுறையில் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரி வாங்கி ஏமாந்தால் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு நடைமுறையில் உள்ளது.

குறிப்பாக கேரளாவில் அரசு அனுமதியுடன் இந்த லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. ஓணம் உள்பட சில முக்கிய பண்டிகை நாட்களில் பரிசு தொகை என்பது அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி திருவோணம் பம்பர் லாட்டரி கேரளாவில் விற்பனை செய்யப்படும்.
கேரளா லாட்டரியில் கோடிகளை வென்றவர்.. ஏசி, சோஃபா எல்லாம் விற்று.. கடன்காரர் ஆன கொடூரம்.. ஷாக் சம்பவம்
அதன்படி இந்த ஆண்டும் திருவோணம் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் பரிசாக ஒருவருக்கு ரூ.25 கோடியும், 2வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும், 3வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 வகைகளில் மொத்த பரிசுத்தொகையாக ரூ.125.54 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்களும் இந்த லாட்டரியை அதிகம் வாங்கினார்கள்.
மொத்தம் 80 லட்சம் லாட்டரி பிரிண்ட் செய்யப்பட்டத. ஒரு லாட்டரி ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 71,43,008 லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 ம்தேதி லாட்டரி டிக்கெட்டுக்கான ரிசல்ட் என்பது வெளியானது. இதில் கர்நாடகா மாநிலம் பாண்டவபுராவை சேர்ந்த ஸ்கூட்டர் மெக்கானிக் அல்தாப் பாஷாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.
அல்தாப் பாஷாவிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது.. இதில் வரி, பிடித்தம் எல்லாம் போக அவருக்கு ரூ.12.88 கோடி கிடைக்க உள்ளது. இந்நிலையில் தான் கேரளா திருவோணம் லாட்டரில் மெக்கானிக் அல்தாப் பாஷாவுக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை கிடைக்க அவரது மனைவி தான் முக்கிய காரணம் என்ற சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.
திருவோணம் பம்பர் லாட்டரி.. இந்த முறையும் வெளிமாநில நபருக்கே ரூ.25 கோடி முதல் பரிசு.. வென்றது யார்?
அதாவது அல்தாப் பாஷா கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறார். ஆனால் அவருக்கு பெரிய பரிசுத்தொகை என்பது கிடைத்தது இல்லை. அவ்வப்போது சிறிய பரிசுத்தொகை மட்டுமே கிடைத்துள்ளது. ஆனாலும் கூட அல்தாப் பாஷா மனம் தளரவில்லை. தொடர்ந்து அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி வாங்கி வந்தார். இவர் தனது கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள லாட்டரி விற்பனையாளரிடம் நண்பர் மூலம் 2 லாட்டரிகளை வாங்கினார். ஒவ்வொரு லாட்டரியும் 500 ரூபாயாகும். மொத்தம் ரூ.1000க்கு 2 லாட்டரி வாங்கினார்.

அதன்பிறகு ஒரு லாட்டரியை அல்தாப் பாஷா தனது நண்பரிடம் விற்க முயன்றார். ஆனால் அவரது மனைவி சீமா தடுத்தார். வேண்டாம்.. 2 லாட்டரியையும் நாமே வைத்து கொள்வோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தான் அல்தாப் பாஷா லாட்டரியை விற்பனை செய்யவில்லை. 2 லாட்டரியை வைத்திருந்த நிலையில் அதில் ஒன்றுக்கு தான் ரூ.25 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஒருவேளை மனைவி சீமாவின் பேச்சை கேட்காமல் அல்தாப் பாஷா பரிசுத்தொகை விழுந்த லாட்டரியை விற்பனை செய்திருந்தால் பெரிய ஏமாற்றம் கிடைத்து இருக்கும். ஆனால் மனைவி சீமாவின் பேச்சை கேட்டதால் அல்தாப் பாஷாவின் குடும்பம் தற்போது கோடீஸ்வரராக மாறி உள்ளது.
இதுபற்றி அல்தாப் பாஷா - சீமா தம்பதியின் 18 வயது மகள் தனஷ் பாத்திமாக கூறுகையில், ‛‛என் தந்தை ஒரு லாட்டரியை நண்பருக்கு கொடுக்க முடிவு செய்தார். ஆனால் எனது தாய் தான் லாட்டரியை கொடுக்க வேண்டாம் என்று தடுத்தார். இதனால் எனது தந்தை TG 434222 என் எண் கொண்ட லாட்டரியை வைத்திருந்தார். அதற்கு தான் தற்போது ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது’’ என்றார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications