திருவோணம் பம்பர் லாட்டரி.. இந்த முறையும் வெளிமாநில நபருக்கே ரூ.25 கோடி முதல் பரிசு.. வென்றது யார்?
சென்னை: கேரள லாட்டரி துறையின் திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு ரூ.25 கோடி உட்பட பல்வேறு பரிசு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த முறை முதல் பரிசு தமிழர் ஒருவருக்கு கிடைத்தது. திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த முறை கர்நாடகாவை சேர்ந்தவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இம்முறையும் முதல் பரிசு எல்லை தாண்டியது மலையாளிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த அல்தாபின் என்பவர் முதல் பரிசு பெற்றுள்ளார்.

கேரளாவை சேர்ந்த ஊடகங்கள் இன்று காலைதான் அல்தாபினை கண்டுபிடித்தது. செய்தி குழுவினர் அல்தாப்பின் வீட்டிற்கு சென்று லாட்டரி துறையின் செயலி மூலம் டிக்கெட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பரிசை உறுதி செய்தனர். ஓணம் பம்பர் பரிசை யார் வெல்வார் என்பதை அறியும் ஆர்வத்தில் கேரள மக்கள் இருந்த நிலையில்.. கர்நாடகாவுக்கு 25 கோடி போன செய்தி கேரளாவில் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையை பகிர்ந்து கொள்ளும் வயநாடு மாவட்டத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் லாட்டரி வாங்க வருகின்றனர். அப்படித்தான் அல்தாஃபும் லாட்டரி எடுக்க வயநாடு வந்துள்ளார். கர்நாடகாவில் மெக்கானிக்காக பணிபுரியும் அல்தாப், கடந்த 15 ஆண்டுகளாக கேரள லாட்டரி சீட்டுகளை சேகரித்து வருகிறார். இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் அல்தாப்.. 15 வருடங்களாக அவ்வப்போது இவருக்கு சிறிய சிறிய பரிசுகள் கிடைத்துள்ளன.ஆனால் பம்பர் பரிசு கிடைப்பது இதுவே முதல்முறை ஆகும் .
ஓணம் பம்பர் முதல் பரிசு அண்டை மாநிலங்களுக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறை பாலக்காடு மாவட்டத்தில் இருந்து டிக்கெட் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் முதல் பரிசை வென்றார். சுருக்கமாகச் சொன்னால், ஓணம் பம்பர் முதல் பரிசை 25 கோடியாக உயர்த்திய பிறகு, மூன்றில் இரண்டு பங்கு பரிசுகள் கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்: அல்தாபிற்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு நிறைய deduction செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில், லாட்டரி முகவர்களுக்கு 10% கமிஷன் பிடித்தம் செய்யப்படும். முதல் பரிசு வென்றவர் ₹ 25 கோடியை வென்றால், ₹2.5 கோடி கழிக்கப்படும். பின்னர், 6.75 கோடி ரூபாய் அரசுக்கு செல்லும்.. அதாவது 30% மாநில வரி விதிக்கப்படும்.
இந்த விலக்குகளுக்குப் பிறகு, பரிசுத் தொகை ₹15.75 கோடியாகக் குறையும். ₹5 கோடிக்கு மேல் வருமானம் உள்ள வெற்றியாளர்களுக்கு வருமான வரியில் கூடுதலாக 37% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்த வழக்கில், கூடுதல் கட்டணம் ₹2.49 கோடியாக சரியும். மேலும், மொத்த வரியில் (₹9.24 கோடி) 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் கூடுதலாக ₹36,99,000 சேர்க்கப்படும்.
மொத்தத்தில், ₹25 கோடி பரிசு வென்றவர் தோராயமாக ₹12.11 கோடி deductionயை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவர்களுக்கு இறுதித் தொகை ₹12.88 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் முதல் பரிசு பெற்றவர் யார் என்று தெரியாத காரணத்தால்.. கேரளாவில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications