தனுஷின் அரசியல் வருகை.. கொடி சர்ச்சைக்கு பிறகு கஸ்தூரிராஜா சொன்ன வார்த்தை! பாயிண்டை பிடித்த ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிய விஷயம் இல்லை. ஆனால் விஜய் முழுமையாக அரசியலுக்கு வந்ததும் எந்த முன்னணி நடிகரை பார்த்தாலும் அடுத்தது இவர்தானா? என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அதிக பேசப்படும் நபர் நடிகர் தனுஷ் தான்.
சமீபத்தில் அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றத்தின் கொடி மீண்டும் கவனம் பெற்றது. அந்த கொடி கார்களில் ஏற்றப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவியது இது ரசிகர் மன்ற கொடியா? அல்லது அரசியல் வருகைக்கான முதல் சிக்னலா? என்று விவாதம் தொடங்கியது.
கஸ்தூரி ராஜா பேட்டி
இந்த நிலையில் தான் இந்த விவாதத்திற்கு மத்தியில் தனுஷின் அப்பாவும் இயக்குநருமான கஸ்தூரிராஜாவின் பழைய பேட்டியும் மீண்டும் வைரலானது. அதில் "நாளை என் மகனோ, பேரனோ அரசியலுக்கு வந்தாலும் அது அவர்களின் முடிவு. யாருடைய எதிர்காலத்தையும் இப்போது முடிவு செய்து சொல்ல முடியாது" என்று அவர் சொல்லி இருந்தார். அதுதான் இப்போது அதிகமாக பேசப்பட்டது.

தனுஷின் கொடி சர்ச்சை
இதற்கு இடையே தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவரும் இயக்குநருமான சுப்பிரமணியன் சிவா தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது இப்போது பேசப்படும் அந்த கொடி புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல, சுமார் 15 வருஷமாக எங்கள் ரசிகர் மன்றத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் கொடி தான்.
சுப்பிரமணியன் சிவா பேட்டி
ஒவ்வொரு வருஷமும் மற்ற நிர்வாகிகள் சந்திப்பில் அதையே பயன்படுத்துவோம். இந்த முறை கார்களில் கட்டியதால் மட்டும் அது புதிய கொடி என்று பேசப்படுகிறது. இதில் வேறு எந்த அரசியல் அர்த்தமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் கோட்டைக்கு போக வாய்ப்பு இருக்கா என்று கேள்வி கேட்டபோது, "அது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போது நடக்கும்" என்று ரஜினி டயலாக்கை சொல்லி இருக்கிறார். இந்த ஒரு வரி தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
போயஸ் கார்டன் வீடு பற்றி பேசிய பிறகு நடந்த சம்பவம்.. இது போதும் எனக்கு.. தனுஷ் உருக்கம்
அதுபோல கஸ்தூரி ராஜா லவ் ஓ லவ் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசி கொண்டு இருந்த போது தனுஷ் அரசியல் வருகை பற்றி கேட்ட போது, இதை அவரிடம் தான் கேட்கனும்.. என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். இதை வைத்தும் இப்போது ரசிகர்கள் பஞ்சாயத்தை தொடங்கி விட்டார்கள். அதாவது தனுஷ் அரசியலுக்கு வருவது அவருடைய அப்பாவுக்கே பிடிக்கவில்லையா? அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கிடையில், தனுஷ் தனது முழு கவனத்தையும் தற்போது சினிமாவில்தான் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட இயக்குநர்களுடன் அவரது படங்கள் வரிசையாக இருக்கின்றன.
அதனால், அரசியல் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தனுஷ் தரப்பில் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், கஸ்தூரிராஜாவின் கருத்து, ரசிகர் மன்ற கொடி, அதற்கு சுப்ரமணியம் சிவா அளித்த விளக்கம் ஆகியவை ஒன்றாக சேர்ந்ததால், "தனுஷ் அரசியல்" என்ற தலைப்பு மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.













Click it and Unblock the Notifications