போயஸ் கார்டன் வீடு பற்றி பேசிய பிறகு நடந்த சம்பவம்.. இது போதும் எனக்கு.. தனுஷ் உருக்கம்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கர' படத்தின் ப்ரீ-ரிலீஸ் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய சில விஷயங்கள், இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கர படம் எதிர்பார்ப்பு
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கர திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. "இந்த படம் வேற லெவல் இருக்கலாம்" என்று ட்ரைலர் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் தனுஷ் ஒரு திருடன் கேரக்டரில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
சமீப தோல்விகள்
நேராக சொல்லணும்னா, தனுஷின் இட்லி கடை உட்பட கடைசி சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த "கர" படம் "ஒரு பெரிய கம்பேக் ஹிட் ஆகணும்" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், அவரிடமும் இருக்கிறது. ட்ரெய்லர் ரிலீஸ்க்குப் பிறகு அந்த நம்பிக்கை கொஞ்சம் அதிகரித்திருப்பது உண்மை.
மேடையில் மனம் திறந்த தனுஷ்
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது தனுஷ் ஒரு முக்கியமான விஷயம் சொன்னார். "என் திரைப்பயணத்தில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கலை. ஆனா நல்ல இயக்குநர்கள் என்னை தேடி வந்தார்கள்.
அதோடு, 'கர' படத்தின் டைட்டிலை பற்றி வந்த விமர்சனங்களுக்கும் அவர் நேரடியாக பதில் கொடுத்தார். "வேலையில்லா பட்டதாரி, திருச்சிற்றம்பலம் படங்களுக்கும் இதே மாதிரி விமர்சனம் வந்தது. ஆனா அந்த படங்கள் ஹிட்டாயிடுச்சு" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
வைரலான போயஸ் கார்டன் மீம்
இந்த விழாவின் ஹைலைட் என்னன்னா... தனுஷ் பேசின 'போயஸ் கார்டன்' விஷயம் தான். ஒரு சமயம் அவர் சொன்ன, "ஏன் நான் எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?" என்ற பேச்சு மீமாக வைரலானது.அதை பற்றி கேட்டபோது, தனுஷ் ரொம்ப சிம்பிளாக பதில் சொன்னார்.
அதாவது ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்றது நம்ம கையில் தான் இருக்கு என்று சொல்லி இருந்தார்.அதோடு ஒரு ரியல் சம்பவத்தையும் பகிர்ந்தார்.
ஒரு சாதாரண மனிதன் சொன்ன வார்த்தை
தனுஷ் சொன்ன சம்பவம் என்னன்னா, ஒரு நாள் விமான நிலையத்திலிருந்து பேருந்தில் போகும்போது, அந்த பேருந்து ஓட்டுனர் ஒருவர் அவரிடம் செல்ஃபி கேட்டாராம். உடனே தனுஷும் சரி என்று சொல்லி இருக்கிறார். அப்போது அவர் சொன்னதுதான் தனுஷுக்கு வியப்பை கொடுத்ததாம்.
"நான் இதுவரைக்கும் யாரிடமும் செல்ஃபி கேட்டதே இல்லை. ஆனா நீங்க 'போயஸ் கார்டன் வீடு' பற்றி பேசியது என் மகனுக்கு இன்ஸ்பிரேஷன் ஆயிடுச்சு. அவன் இப்போ ரொம்ப கடினமா உழைக்கிறான்." என்று சொன்னாராம்.
மீம் விளக்கம்
இதற்கு பிறகு தனுஷ், நான் பேசியதை மோட்டிவேஷனாக எடுத்துக்கிட்டா மோட்டிவேஷன். என்டர்டெயின்மெண்டாக எடுத்துக்கிட்டா என்டர்டெயின்மெண்ட். "நம்ம வேலை மக்களை மகிழ்விப்பது தான். அதனால் மீமாக போட்டாலும் பரவாயில்லை" என்று அவர் சொன்னார்.
தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு பிரிந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்குப் பிறகு, போயஸ் கார்டன் பகுதியில் தனுஷ் வீடு வாங்கியது கூட பெரிய பேச்சாக இருந்தது. "நாமும் அந்த லெவலில் போகலாம்" என்பதற்கான ஒரு சின்ன சின்ன சிக்னலாக பலர் அதை பார்க்கிறார்கள் என்று தனுஷ் சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications