மனைவியை கொன்று இந்திய கள்ளக்காதலிக்கு போட்டோ அனுப்பிய அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர்.. சிக்கியது எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக திருமணமான 4 மாதத்தில் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து நாடகமாடினார். மனைவி இறந்த போட்டோவை தனது கள்ளக்காதலிக்கு அவர் அனுப்பி வைத்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
தெலுங்கானாவில பிறந்தவர் அவினாஷ் நார்னே. இவருக்கு வயது 30. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ராஜிதா சப்பினேனி. இவருக்கு வயது 27. திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ம் தேதி திடீரென்று பெலிவி போலீஸ் நிலையத்துக்கு போன் போட்டு அழுதபடி அவினாஷ் நார்னே பேசினார்.

அப்போது அவர், ''சில வேலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றேன். 40 நிமிடத்துக்கு பிறகு வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டின் கழிவறையில் கதவை பூட்டிக்கொண்டபடி உள்ளே இருக்கிறார். கதவை தட்டி அவரது பெயரை சொல்லி அழைத்தாலும் பதில் இல்லை'' என்றார்.
இதையடுத்து உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். கழிவறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ராஜிதா சப்பினேனி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடல் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
கிங் கவுண்ட மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜிதா சப்பினேனி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்பட்டு இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவினாஷ் நார்னேவை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது மனைவி ராஜிதா சப்பினேனியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணத்துக்கு முன்பாகவே இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் உறவில் அவர் இருந்துள்ளார். இதுபற்றி யாருக்கும் தெரியாது. இந்த உறவில் இருந்தபோதே அவினாஷ் நார்னேவிற்கு குடும்பத்தினர் ராஜிதா சப்பினேனி உடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அவினாஷ் நார்னே தொடர்பில் இருக்கும் பெண்ணும் பங்கேற்றுள்ளார்.
திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆகியும் கூட அவினாஷ் நார்னே தொடர்ந்து கள்ளஉறவை தொடர்ந்துள்ளார். அடிக்கடி அவருடன் பேசி வந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ அவர் முடிவெடுத்தார். இதனால் திட்டமிட்டு மனைவி ராஜிதாசப்பினேனியை கொன்று போலீசாரிடம் நாடகமாடியது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி தனது மனைவி ராஜிதா சப்பினேனியை கொன்ற பிறகு அவரது உடலை போட்டோ எடுத்து கள்ளக்காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவினாஷ் நார்னே கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும்போது அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications