"கண்கள் இரண்டால்” சுவாதி வாழ்க்கையில் மீண்டும் வசந்தம்.. எளிமையான 2வது திருமணம்.. கணவர் யார் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடித்த படங்களை விட அவர்கள் உருவாக்கிய நினைவுகளே ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும். அந்த வரிசையில் நடிகை சுவாதி ரெட்டியும் ஒருவர். சுப்பிரமணியம் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்து அவருடைய கவனத்தை ஈர்த்துவிட்டார்.
அவருடைய பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர், தெத்துப்பல் புன்னகை, கண்கள் இரண்டால் பாடல் என இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாது. படம் முழுக்க இளைஞர்களின் கிரஷ்ஷாக அவர் இருந்தாலும் கிளைமாக்ஸில் நீதாமா சரியான வேலையை பார்த்துட்டு போயிட்ட என்று இப்போதும் ரசிகர்கள் இவருடைய கேரக்டரை பார்த்து திட்டி தீர்த்து வருகின்றனர். சரி அது ஒரு படமாக இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் இப்போது புது வசந்தம் வீச தொடங்கி இருக்கிறது அது குறித்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகை சுவாதி ரெட்டி வாழ்க்கை
சுவாதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிதாக சோசியல் மீடியாவில் காட்டிக்கொண்டது கிடையாது. ஆனால் அவர் இப்போது இரண்டாவது திருமணம் செய்திருக்கும் புகைப்படங்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு தானே திருமணம் நடந்தது? எப்போ விவாகரத்து ஆனது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதாவது ரஷ்யாவில் சுவாதி ரெட்டியின் அப்பா இந்திய கடற்படை அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பயிற்சியாக்காக அங்கு இருந்தபோதுதான் சுவாதி பிறந்திருக்கிறார். பிறகு குடும்பமே இந்தியாவிற்கு திரும்பி வந்து ஹைதராபாத்தில் குடியேறி இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்து சுவாதியின் பேச்சு பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

தொகுப்பாளராக அறிமுகம்
தெலுங்கில் வந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற பிறகுதான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. தமிழில் சுப்பிரமணியபுரம் படம் சுவாதியின் வாழ்க்கையை மாற்றியது. அந்த படத்தில் அவருடைய கேரக்டர் மற்றும் சிம்பிளான மேக்கப்பில் வந்த நடிப்பு பலருடைய மனதில் பசை போல ஒட்டிக்கொண்டது.
அதைத்தொடர்ந்து போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை, திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தை சேர்ந்த விமானி விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தெரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
முதல் திருமணம்
ஆனால் எந்த நிகழ்ச்சிகளிலும் சுவாதி தன்னுடைய விவாகரத்து குறித்து பேசவில்லை. இதனால் இது ஒரு கிசுகிசுப்பாக இருக்குமோ? வதந்தியாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மந்த் ஆப் மது திரைப்படத்தின் மூலம் சுவாதி மீண்டும் நடிக்க திரும்பி இருக்கிறார். அந்த படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் நாகோத்தியுடன் ஒன்றாக வேலை பார்த்த போது இருவருக்கும் நல்ல நட்பு உருவாகி பிறகு அதுவே காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
ரவி மோகனை தனியாக விடாதீங்க! இது பலருக்கு பாடம்.. கண்கலங்க பேசிய சீரியல் நடிகை ரிஹானா
தற்போது இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண புகைப்படங்களை சுவாதி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து நியூ பிகினிங் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த பலரும், நீங்க எப்போதும் சிரித்தபடியே இருங்க என்று வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர். திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து
சுவாதி எந்த சர்ச்சைகளிலும் பெரிதாக சிக்கவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும், அதைப்பற்றி வெளியே சொல்லி அனுதாபம் தேடிக் கொள்ளவும் இல்லை. யாரையும் குறை சொல்லவும் இல்லை. தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி தன்னுடைய புதிய வாழ்க்கையையும் தொடங்கி இருக்கிறார். இதனால் தான் இவருடைய இரண்டாவது திருமணம் செய்தி சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications