கட்டிலில் கயிறு.. கையில் லைவ் ஒயர்.. விளக்கு அணைந்ததும் கணவனுக்கு கரண்ட் ஷாக்.. மனைவி மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாலி கட்டிய கணவன் என்றும் பார்க்கவில்லை.. கோபம் மண்டைக்கேறிய மனைவி, மனசாட்சியே இல்லாமல் இப்படியொரு காரியத்தை செய்துள்ளார்.. இப்போது போலீசாரின் விசாரணை பிடியிலும் உள்ளார்.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும் ஒரு நிமிட கோபத்தில் எடுத்த முடிவால், அந்த குடும்பமே இன்று நிலைகுலைந்து போயுள்ளது.. என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள அவுங் காவல் எல்லைக்குட்பட்டது பர்சதேபூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சஞ்சீவ் திவாரி. இவருக்குத் திருமணம் ஆகி மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

Husband Electric Shock Case

தம்பதிக்குள் தகராறு

சஞ்சீவ் திவாரிக்குக் குடிபழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தினமும் வீட்டில் சண்டை வெடித்து வந்துள்ளது. "குடியை நிறுத்துங்கள்" என்று மனைவி சொல்லி கொண்டேயிருக்க, சஞ்சீவ் திவாரி அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் தம்பதிக்குள் குடும்பத் தகராறு நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவும் வழக்கம் போல இருவருக்கும் இடையே குடிப்பழக்கம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் சஞ்சீவ் திவாரியின் மனைவி, சஞ்சீவ் திவாரியை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்று அங்கிருந்த கட்டிலில் கை கால்களை இறுக்கமாகக் கட்டிப் போட்டார்.

படுக்கையறையில் சிறை

எங்கும் தப்பித்து ஓட முடியாதபடி நைட் முழுவதும் ஒரு ரூமுக்குள் சிறைவைத்தார். அத்துடன் ஆத்திரம் அடங்காத அந்த பெண், கணவரை த்டியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அப்போதும் ஆத்திரமடையாத அந்த பெண், வீட்டிலிருந்த மின்சார கம்பிகளை எடுத்து வந்து, கட்டிலில் கட்டப்பட்டிருந்த சஞ்சீவ் திவாரியின் உடலில் பாய்ச்ச்சி சித்ரவதை செய்துள்ளார்.

கரண்ட் ஷாக் கொடுக்கவும், சஞ்சீவ் திவாரி வலியால் துடித்தார்.. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கும் போராடினார். மறுநாள் சனிக்கிழமை அதிகாலை, அந்தப் பகுதியிலிருந்து போலீசாருக்கு அவசர உதவி எண்ணான 112'ல் இருந்து ஒரு அழைப்பு வந்தது..

கணவனுக்கு கரண்ட் ஷாக் தந்த மனைவி

அதில், நபர் ஒருவர் வீட்டில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவுங் காவல் நிலைய போலீசார், சஞ்சீவ் திவாரியை மீட்டு ஃபதேபூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக அவர் கான்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு சஞ்சீவ் திவாரியின் உடல்நிலை ஓரளவுக்கு தேறியது.. இதையடுத்து போலீசார் அவரிடம் நடந்தவை குறித்து வாக்குமூலம் பெற்றனர். பிறகு, சஞ்சீவ் திவாரியின் தம்பி, தன்னுடைய அண்ணிக்கு எதிராக போலீசில் புகார் தந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவனைக் கட்டிப்போட்டு கரண்ட் ஷாக் கொடுத்த மனைவியை அதிரடியாகக் கைது செய்தனர். இதுகுறித்து ஃபதேபூர் மாவட்ட எஸ்பி அபிமன்யு மாங்லிக் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பாதிக்கப்பட்ட நபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவரை அறையில் பூட்டி தாக்கிய மனைவியைக் கைது செய்துள்ளோம்.. இந்த சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+