தமிழ்நாட்டை வளர்த்த "கைடன்ஸ்" காலி.. அடுத்தடுத்த ராஜினாமா.. ஆந்திரா, தெலுங்கானா போகும் முதலீடு!
சென்னை: தமிழ்நாட்டிற்கு திமுக ஆட்சியில் தொடர் முதலீடுகள் வருவதற்கான காரணமாக இருந்த கைடன்ஸ் அமைப்பில் இருந்து வரிசையாக பல முக்கிய தலைகள் ராஜினாமா செய்து வருகிறார்கள்.
இந்தியாவின் உற்பத்தி மற்றும் தொழில் துறை வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதாரப் பயணத்தில் தற்போது பெரிய ஃபுல் ஸ்டாப் வைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நம் மாநிலத்திற்குப் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து வருவதில் மிக முக்கியப் பங்காற்றி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் இருந்து பலர் ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர்.
இங்கே அடுத்தடுத்து அரங்கேறி வரும் உயர்மட்ட அதிகாரிகளின் விலகல்கள், தொழில்துறையின் எதிர்காலம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டிற்கு இனி முதலீடுகள் வருமா என்ற அச்சத்தை, கேள்விகளை இந்த ராஜினாமா, விலகல்கள் ஏற்படுத்தி உள்ளன.
கைடன்ஸ் காலி
தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பொறுப்பேற்றதில் இருந்தே இந்த ராஜினாமா நடவடிக்கைகள் தொடருகின்றன. உள்வட்டாரத் தகவல்களின்படி, கைடன்ஸ் தமிழக அமைப்பிலிருந்து இதுவரை சுமார் 10 முக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்த கைடன்ஸ் என்ற ஒரு முதன்மை நிறுவனத்தில் இத்தகைய திடீர் மாற்றங்கள் நிகழ்வது, தமிழ்நாட்டின் தொழில்துறைச் சூழலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் வேகம்
இதற்கு இடையே அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டிற்கு வரவிருந்த முக்கிய முதலீடுகளைத் தன் வசம் ஈர்ப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய சூழலில், மாநிலங்களுக்கு இடையே முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் இதை சிறப்பாக கையாண்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
தொழிலதிபர்களும், உலகளாவிய நிறுவனங்களும் தங்களுக்கு எங்குச் சாதகமான சூழல் நிலவுகிறது, எங்கு அதிகப்படியான சலுகைகளும் தடையற்ற அரசு அனுமதிகளும் கிடைக்கின்றன என்பதை ஆராய்ந்து, அத்தகைய மாநிலங்களை நோக்கியே தங்கள் முதலீடுகளை நகர்த்த விரும்புகின்றனர்.
இந்த இக்கட்டான தருணத்தில், கைடன்ஸ் தமிழகத்தின் பலவீனம் அண்டை மாநிலங்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது இப்போது ரீலிஸ் பார்க்கும் இளைஞர்கள் நாளை சாப்பாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் அவர்கள் ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் வேலை பார்க்கும் நிலை ஏற்படும்.
அதிமுக, திமுக என இருவேறு கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தபோதிலும், தொழில் கொள்கையில் அவர்கள் கடைப்பிடித்து வந்த ஒரே கொள்கைதான் தமிழ்நாட்டை ஒரு வலுவான உற்பத்தி மையமாக மாற்றியது.
இரு ஆட்சிகளிலும் அரசியல் ரீதியான சில லாபங்களை அந்த கட்சிகள் பெற்றாலும், அவை தொழில்துறையின் வளர்ச்சியை ஒருபோதும் முடக்கவில்லை. நிறுவனங்கள் தடையின்றி இயங்குவதற்கும், விரைவான அனுமதிகளைப் பெறுவதற்கும் ஏற்றவாறு இணக்கமான சூழலே இங்கு நிலவி வந்தது.
இருப்பினும், சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசும், முதல்வர் விஜய்யின் ஆரம்பகால நடவடிக்கைகளும் தொழில்துறையினருக்குச் கவலையை அளிப்பதாக உள்ளன. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications