கேரளா லாட்டரியில் கோடிகளை வென்றவர்.. ஏசி, சோஃபா எல்லாம் விற்று.. கடன்காரர் ஆன கொடூரம்.. ஷாக் சம்பவம்
சென்னை: கேரளா லாட்டரி முடிவுகள் நேற்று வெளியானது. முடிவுகள் நேற்று வெளியான நிலையில்.. மக்கள் இடையே அதன் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. இந்த முறை கர்நாடகாவை சேர்ந்தவர் கேரளா லாட்டரியில் முதல் பரிசு வென்றுள்ளார்.
கேரளா லாட்டரியில் வெற்றிபெறுவது பெரிய விஷயமாக இருக்கலாம். இதற்கு பெரிய அளவில்.. அதிர்ஷ்டம் தேவை. இந்த லாட்டரி வாங்கிய பின் பலரின் வாழ்க்கை மாறுவது வழக்கம். ஆனால் ஏனோ இந்த லாட்டரி வாங்கிய பலருக்கும்.. அதன்பின் பல சோகமான சம்பவங்கள் நடந்து உள்ளன.

அதிலும் இந்த பரிசு தொகை 10 கோடிக்கு மேல் உயர்த்தப்பட்டதில் இருந்தே பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . உதாரணமாக
ஆறு ஆண்டுகளுக்கு முன், திருவோணம் பம்பர் லாட்டரியை, மலப்புரத்தைச் சேர்ந்த மணிஎன்ற ஒருவர் வென்றார். அன்று முதல் பரிசு பத்து கோடி ரூபாய். அனைத்து வரிகளையும் செலுத்தி, பெரும் தொகையைப் பெற்ற பிறகு, அவர் சந்தோசமாக வாழ்வார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த லாட்டரி காரணமாக அவரின் வாழ்க்கை மோசமாக மாறியது. அவர் பெரும் கடனுக்குச் செல்ல வேண்டியிருந்தது. 10 கோடி மட்டுமின்றி 25 லட்சம், 5 லட்சம் என பல பரிசுகளையும் அவர் பெற்றார். திருவோணம் பம்பர் பரிசுத் தொகை முதன்முறையாக 10 கோடியாக உயர்த்தப்பட்டபோது முதல் பரிசை அவர்தான் வென்றார்.
ஆனால், பின்னர் கடனை அடைக்க வீட்டில் பொருத்தியிருந்த ஏசி, கட்டில், ஜன்னல்களை அகற்றி விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் முதலில் பணம் வென்றதும்.. பலரும் பணத்தை எங்களுக்கு கொடுங்கள் எங்களுக்கு கொடுங்கள் என்று அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
அவரின் 2 மகன்கள், 1 மகளுக்கு இந்த பணம் பிரித்து கொடுக்கப்பட்டது. அவர்களின் கடன் அடைக்கப்பட்டது. அதோடு வீட்டில் 6 அறைகளில் 6 ஏசி போடப்பட்டது. அதோடு புதிய பொருட்கள் வாங்கப்பட்டது. பல உறவினர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் வாங்கிய யாரும் அவரிடம் பணத்தை திரும்பி கொடுக்கவில்லை.
அதோடு அவர் முதலீடு செய்த இடங்களிலும் ஏமாற்றம் அடைந்து உள்ளார். இதனால் அவருக்கு போக போக கடன் ஏற்பட்டுள்ளது. இந்த கடன் எல்லாம் அவரின் கையை மீறி சென்ற நிலையில்.. கடைசியில் கையில் இருந்த பணமும் செலவானது. இதனால் வேறு வழியில்லாமல் வீட்டில் பொருத்தியிருந்த ஏசி, கட்டில், ஜன்னல்களை அகற்றி விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல் கடந்த வருடத்திற்கும் முந்தைய வருடம் லாட்டரி வென்றவர்.. வீட்டை காலி செய்துவிட்டு கேரளாவில் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சென்ற வருடத்தில் இருந்து லாட்டரி வென்றவரின் விவரத்தை வெளியிட வேண்டாம் என்றால்.. அதை வெளியிட மாட்டோம் என்ற புதிய விதியை கேரளா அரசு கொண்டு வந்துள்ளது.
யாருக்கு வெற்றி?: கேரள லாட்டரி துறையின் திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு ரூ.25 கோடி உட்பட பல்வேறு பரிசு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த முறை முதல் பரிசு தமிழர் ஒருவருக்கு கிடைத்தது. திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த முறை கர்நாடகாவை சேர்ந்தவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இம்முறையும் முதல் பரிசு எல்லை தாண்டியது மலையாளிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த அல்தாபின் என்பவர் முதல் பரிசு பெற்றுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஊடகங்கள் இன்று காலைதான் அல்தாபினை கண்டுபிடித்தது. செய்தி குழுவினர் அல்தாப்பின் வீட்டிற்கு சென்று லாட்டரி துறையின் செயலி மூலம் டிக்கெட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பரிசை உறுதி செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications