அயோத்தி போல கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்: முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவின் ராமநகராவில் அயோத்தி போல ராமர் கோவில் கட்டப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் மட்டும்தான் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அளவுக்கு வலிமையாகவும் பாஜக இருக்கிறது.

இதனால் வரும் சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்க வைப்பதில் பாஜக மும்முரமாக இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் வருகிறார் பிரதமர் மோடி.
கர்நாடகா தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் நிலையில் இன்று அம்மாநில சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் பசவராஜ்.
மேலும் கர்நாடகாவின் ராமநகராவில் அயோத்தி போல ராமர் கோவில் கட்டப்படும் எனவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை. ராமநகரா ராமர் கோவில் உட்பட கர்நாடகா மாநில கோவில்கள், மடங்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு ரூ1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை. ஏற்கனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அழைத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என முதல்வர் பசவராஜ் அறிவித்ததற்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
30 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ25,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ100 கோடியில் 23 வட்டங்களில் பள்ளிகள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் முதல்வர் பசவராஜ். முன்னதாக பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூ சுற்றியபடி சட்டசபைக்கு வருகை தந்தனர்.கர்நாடகா பட்ஜெட் 2023-ல் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
அனைத்து பணிபுரியும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்
கோவில்கள், மடங்கள் மேம்பாட்டுக்கு ரூ1,000 கோடி நிதி ஒதுக்கீடு;
வேளாண்துறைக்கு ரூ39,031 கோடி நிதி ஒதுக்கீடு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு
ரூ100 கோடியில் புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்படும்
பெண்கள் குழந்தைகள் நலனுக்கு ரூ46,000 கோடி ஒதுக்கீடு
எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை சமூக இளைஞர்கள் அக்னிவீர் திட்டத்தில் சேர இலவச பயிற்சி
கர்நாடகா பல்கலை, கல்லூரிகள் படப்படிப்பு மாணவர்களுக்கு இலவச கல்வி
ஆன்லைன் தெருநாய்கள் தத்தெடுப்பு நடைமுறை
பெங்களூரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 20,000 வீடுகள்
ரூ5,000 கோடி மதிப்பீட்டில் 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications