தேர்தல்னாவே சும்மாவா? பணிபுரியும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூர்: கர்நாடகாவில் பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது. பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் போராடுகிறது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள், தொங்கு சட்டசபைக்கு சாத்தியங்கள் இருப்பதாக கூறுகின்றன. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே கர்நாடகா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே கர்நாடகா சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். தேர்தல் நடைபெறும் நிலையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு ஏற்ப பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது தொடங்கி பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் (வங்கிகள், பள்ளி- கல்லூரிகள், தொழில்துறை நிறுவனங்கள்) அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை.
தமிழ்நாட்டில் திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று அனைத்து தரப்பு பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்பது. திமுக ஆட்சி அமைந்ததும் இந்த வாக்குறுதி உடனடடியாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அன்றாடம் பணிகளுக்கு செல்லக் கூடிய அனைத்து தரப்பு பெண்களுக்கும் மாதம் ஒரு கணிசமான தொகை சேமிப்பாகிறது என்பதால் இத்திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். இது ஒரு முன்னோடித் திட்டமாகவும் புகழப்படுகிறது.
தற்போது கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசும் இத்திட்டத்தின் ஒரு பகுதியை அப்படியே கையில் எடுத்துள்ளது. கர்நாடகாவில் பெண் வாக்காளர்களிடையே இத்திட்டம் தாக்கத்தையும் ஆதரவையும் ஏற்படுத்தக் கூடும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications