பறக்கும் பெங்களூர் மெட்ரோ... டார்கெட் "இதுதான்.." சித்தராமையா சொன்ன மிக முக்கிய தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் டிராபிக் சிக்கலைத் தீர்க்க மெட்ரோ மிக முக்கியமான ஒரு தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு இப்போது மெட்ரோ கட்டுமானங்கள் தொடர்ந்து நடந்து வரும் சூழலில், இது தொடர்பாக மிக முக்கியமான ஒரு அறிவிப்பை அம்மாநில முதல்வர் சித்தராமையா வெளியிட்டார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1ம் தேதி தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன் பிறகு பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக பட்ஜெட்
அம்மாநில முதல்வரும் நிதித் துறையைத் தன்வசம் வைத்திருப்பவருமான சித்தராமையா இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சரியாகக் காலை 10.15 மணியளவில் சித்தராமையா பட்ஜெட் உரையை வாசித்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இருந்தது. குறிப்பாகப் பெங்களூர் வளர்ச்சிக்கு முக்கிய அறிவிப்புகள் இருந்தது.
பெங்களூர் மெட்ரோ
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பெங்களூரின் நம்ம மெட்ரோ இப்போது நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும். தற்போது 96 கி.மீ. தூர வழித்தடம் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் 10 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். இதுவரை இந்த திட்டத்திற்கு ரூ. 67,460 கோடி செலவாகியுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு 88% (ரூ. 59,376 கோடி) மற்றும் மத்திய அரசின் பங்கு 12% (ரூ. 8,084 கோடி) ஆகும்.
2026-27 நிதியாண்டில் மேலும் 41 கி.மீ. புதிய மெட்ரோ வழித்தடங்களைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 15 லட்சம் கூடுதல் பயணிகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிவட்ட சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து ஐடி நிறுவனங்களை இணைக்கும் வகையில் 9 கி.மீ நீள நடைபாதை அமைக்கப்படும். அதற்கான நிதியுதவியை வெளிவட்ட சாலை நிறுவனங்களின் சங்கம் வழங்கும். ரூ.160 கோடி மதிப்பில் இது கட்டப்படும்.
பெங்களூர் நீர் சப்ளை
பெங்களூரு நகரின் சுமார் 1.40 கோடி மக்களுக்குக் குடிநீர் வழங்கும் காவிரி நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 2,225 MLD (மில்லியன் லிட்டர்) நீர் வழங்கப்படுகிறது. மேலும் 6 TMC (ஆயிரம் மில்லியன் கன அடி) நீரை வழங்குவதற்காக, ஜிகா (JICA) உதவியுடன் ரூ. 6,939 கோடி மதிப்பில் காவிரி திட்டம் 6ஆம் கட்டத்தை மாநில அரசு வகுத்துள்ளது.
புறநகர் ரயில்கள்
பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டத்தில், இரண்டாம் வழித்தடம் பென்னிகானஹள்ளி - சிக்கபனவர (Benniganahalli-Chikkabanavara) ரூட்டில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. அங்குக் கட்டுமானம் இப்போது நடைபெற்று வருகிறது. நான்காம் வழித்தடமான ஹீலாலிகே- ராஜனுகுண்டே (Heelalige-Rajanukunte) ரூட்டில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்கின்றன. இந்த இரு வழித்தடங்களையும் 2030 டிசம்பருக்குள் முடித்திட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இப்போது பெரும்பாலான மாநிலங்கள் தங்களின் முக்கிய நகரங்களில் டிராபிக்கை குறைக்க மெட்ரோ திட்டங்களையே நாடுகிறது. சென்னையிலும் கூட இப்போது மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மெட்ரோ 2ம் கட்டம் சில மாதங்களில் படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications