பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டுமான நிறுவனங்களின் நெருக்கடி-பிற மாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை ரத்து செய்த எடியூரப்பா

Google Oneindia Tamil News

பெங்களூரு: கட்டுமான நிறுவன அதிபர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து பிற மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Karnataka cancels special trains for migrant workers

இந்த நிலையில் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகளே செய்து வருகின்றன.

கர்நாடகா மாநில அரசும் 2 சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தது. இதனிடையே பிற மாநில தொழிலாளர்கள் வெளியேறுவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவை கர்நாடகா கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

பிற மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்.. ஒரு கோச்சுக்கு 54 பேர் தான்.. பாயிண்ட் டூ பாயிண்ட் பிற மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்.. ஒரு கோச்சுக்கு 54 பேர் தான்.. பாயிண்ட் டூ பாயிண்ட்

Recommended Video

    Today Headlines - 06 MAY 2020 இன்றைய தலைப்புச் செய்திகள் | Morning Headlines | Lockdown Updates

    அப்போது பிற மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமான தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இச்சந்திப்புக்குப் பின்னர் பிற மாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார்.

    English summary
    The Karnataka goverment has cancelled all the special trains which were to ferry migrant workers to their home states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X